வரவேற்கப்படாத கிறிஸ்து THE UNWELCOMED CHRIST 55-1002 ஞாயிற்றுக்கிழமை மாலை, அக்டோபர் 2, 1955 லேன் டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 55-1002 - வரவேற்கப்படாத கிறிஸ்து நாம் தலைகளைத் தாழ்த்தி முதலாவதாக அவரிடத்தில் கேட்போமா. பரலோக பிதாவே, இது உம்முடைய வார்த்தை. புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ஆகையால் அந்த வார்த்தை தேவனாயிருந்தபடியால், அது இப்போதும் தேவனாயிருக்கிறது. எனவே இன்றிரவு எங்களுக்கு முன்பாக இந்த வார்த்தையை வைத்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது, இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கும் விதமானது, நீர் இதை அனைத்து அறிவாளிகளுக்கும், ஞானிகளுக்கும், விவேகி களுக்கும் மறைத்து வைத்திருக்கிறீர் என்பதை நாங்கள் உணருகிறோம். மேலும் கற்றுக் கொள்ள விரும்புகிற பாலகர்களுக்கு இதை வெளிப்படுத்துவேன் என்று நீர் சொல்லி யிருக்கிறீர். இப்போது, இன்றிரவு நாங்கள் கற்றுக்கொள்ள மனதாய் இருக்கிறோம்; அதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். மேலும் பெரிய போதகராகிய தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் வந்து, இன்றிரவு நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காரியங்களை எங்களுக்குப் போதிப்பார் என்று எதிர்பார்த்து இங்கே இருக்கிறோம். 2 பிதாவே, இன்றிரவு எங்கள் இருதயங் களைப் பரிசுத்தப்படுத்தும். எல்லா சந்தேகங் களையும் பயங்களையும் அகற்றிவிடும். மேலும் பெரிய பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, எங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்தோடும் பேசுவாராக. மேலும் ஆண்டவரே, உம்மிடத்தில் அன்பில்லாத எல்லாப் பாவிகளையும் இரட்சியும். இன்றிரவு அவர்களுடைய இருதயங்களோடு நீர் இடைபடும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். பின்மாற்றம் அடைந்தவர்களை, பிதாவே, மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வாரும். மேலும் நீர் வியாதியஸ்தர்களைச் சுகமாக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இந்தக் கூட்டத்தின் மூலம் மகிமை அடைவீராக. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். லூக்கா 7-ம் அதிகாரம் 36-வது வசனத்தில், நான் ஒரே ஒரு வசனத்தை மட்டும் வாசிக்கிறேன். ஒருவேளை, இன்றிரவு நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, இந்த அதிகாரத்தின் மீதிப் பகுதியையும் வாசிக்கலாம். இது மிகவும் சிறப்பானது. ஆரம்பிப்பதற்காக நான் இதை மட்டும் வாசிக்கிறேன், 36-வது வசனம். பரிசேயரில் ஒருவன்... (ஆரம்பிக்கவே எனக்கு இது பிடித்திருக்கிறது)... தன்னோடே போஜனம் பண்ணும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்து, பந்தியிருந்தார். 3 நீண்ட வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தின் வார்த்தையை வாசித்ததை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நான் கர்த்தராகிய இயேசுவை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன், நீங்களும் அவ்வாறே செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எனவே நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், நம்முடைய இருதயங்களைத் திறந்து பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து நம்மோடு பேச இடங்கொடுப்போம். இப்போது, இங்கே ஏதோ தவறு இருக்கிறது. இன்றிரவு நமது வேதபகுதியின் ஆரம்பத்திலேயே, ஏதோ ஒன்று சரியாக இல்லை. இந்தப் பரிசேயனுக்கு இயேசுவிடம் என்ன தேவை இருந்தது? உங்களுக்குத் தெரியும், பொதுவாக மனிதர்கள் உங்களை நேசிக்கும்போதும், உங்களுடன் அமர்ந்து ஐக்கியம் கொள்ள விரும்பும்போதும் தான், தங்களுடன் வந்து சாப்பிடுமாறு உங்களை அழைப்பார்கள். வழக்கமாக, சகோதரன் ஜோசப்பும் நானும் அப்படித்தான் நிறைய ஐக்கியம் கொண்டிருக்கிறோம். நாங்கள் வெளியே சென்று இங்கிருக்கும் ஏதேனும் ஒரு இடத்திற்குப் போய், ஒரு ஹாம்பர்கரும் (hamburger) கொஞ்சம் பிரெஞ்சு வறுவலும் (French fries) வாங்கிக்கொள்வோம், அந்த ஹாம்பர்கர்களை வைத்துக்கொண்டு நாங்கள் நிறைய ஐக்கியம் கொள்வோம். நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோம். 4 மேலும்... ஆனால் இந்தப் பரிசேயனுக்கு இயேசுவிடம் என்ன தேவை இருந்தது? அவன் இயேசுவை வெறுத்தான். பரிசேயர்களுக்கு இயேசுவைப் பிடிக்காதபோது... அவன் ஏன் இயேசுவைத் தன்னுடன் வந்து சாப்பிடும்படி கேட்டான்? அவர்கள் அவரை நம்பவில்லை, அவரை வெறுத்தார்கள். அப்படியிருக்க அந்தப் பரிசேயன் ஏன் இயேசுவைத் தன்னுடன் வந்து சாப்பிடும்படி கேட்க வேண்டும்? எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது. பரிசேயர்கள் அவரை அவ்வளவு மோசமாக வெறுத்திருக்கும் போது, அவர்கள் ஒத்துப் போகவே மாட்டார்கள்; ஆனால் இங்கே ஒரு தலைமைப் பரிசேயன், அவரைத் தன்னுடன் வந்து மதிய உணவு உண்ணும்படியும், தான் நடத்தவிருக்கும் ஒரு பெரிய விருந்துக்கு வந்து தன்னுடன் புசிக்கும்படியும் கேட்கிறான். அங்கே அதிகப்படியான வித்தியாசம் இருக்கிறது. அது அப்படித்தான் இருக்கிறது. இல்லை... பொதுவாக ஒன்றாகச் சுற்றுகிற மக்கள், தங்களுக்குள் பொதுவான காரியங்கள் இருக்கும்போதுதான், ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொண்டிருப்பார்கள். இப்போது, சிறு பிள்ளைகளைப் போல, உங்களுக்குப் பொதுவான காரியங்கள் இருந்தால், அவர்கள் ஒருவரோடு ஒருவர் விளையாடுவார்கள். அவர்களுக்குப் பொதுவான காரியங்கள் இருக்கும். 5 வேதாகமம் அதைக் குறித்துப் பேசுகிறது. ஏசாயா சொன்னார், "சிறுகுழந்தைகள் வீதிகளிலே விளையாடுவார்கள்..." இப்போது, நீங்கள் சிறு குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்கள் அனைவரும்... ஒருவேளை ஒருவன் ஜெர்மன் பேசலாம், மற்றொருவன் ஸ்வீடிஷ் பேசலாம், இன்னொ ருவன் ஆங்கிலம் பேசலாம், ஆனால் அவர்கள் குழந்தைகள் என்பதால் அவர்களுக்குள் நிறையப் பொதுவான காரியங்கள் இருக்கும். அவர்கள் பம்பரங்களைச் சுழற்றுவார்கள், பொம்மைகளை வைத்து விளையாடுவார்கள். அவர்களுக்குப் பொதுவான காரியங்கள் உண்டு. ஒரு சிறுமி பாட்டியுடன் சுற்றிக்கொண்டிருப்பதை நீங்கள் கண்டால், அங்கே ஏதோ தவறு இருக்கிறது. இப்போது, ஒரு சிறுமி பாட்டியுடன் சுற்றுவதை நீங்கள் பார்க்கும்போது, அவர்களின் வயதில் அதிக வித்தியாசம் இருக்கிறது. அங்கே ஏதோ தவறு இருக்கிறது. ஒன்று அவள் பாட்டியின் செல்லப் பிள்ளையாக இருக்கலாம், அல்லது அவள்... ஒருவேளை பாட்டி தனது பையில் மிட்டாய் பொட்டலம் வைத்தி ருக்கலாம். புரிகிறதா? அங்கே ஏதாவது காரணம் இருக்கலாம். அந்தச் சிறுமி பாட்டியுடன் சுற்றுவதற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களின் வயதில் அதிக வித்தியாசம் இருக்கிறது. 6 வாலிபப் பிள்ளைகளுக்குச் சில காரியங்கள் இருக்கும், அவர்கள் ஒன்றாகப் பழகுவார்கள், அவர்களுக்குப் பொதுவான காரியங்கள் இருக்கும். நடுத்தர வயதினருக்குப் பொதுவான காரியங்கள் இருக்கும். முதியவர்களுக்கும் பொதுவான காரியங்கள் இருக்கும். கிவானிஸ் (Kiwanis) போன்ற மன்றங்களைப் போல, அவர்களுக்குப் பொது வான காரியங்கள் இருக்கும். கிவானிஸ் மன்றத்தினர் ஒன்றாகக் கூடி, ஒன்றாகச் சாப்பிட விரும்புவார்கள்; ஏனென்றால் அவர்கள் நகரத் தின் விவகாரங்களைப் பற்றியும், ஏழைகளைப் பராமரிப்பது குறித்தும், இன்னும் பலவற்றைப் பற்றியும் பேசுவார்கள். அவர்களுக்குப் பொதுவான காரியங்கள் இருக்கும். எனது தாயார் பயன்படுத்திய ஒரு பழைய பழமொழி சொல்வது போல், "இனம் இனத்தோடு சேரும்" (Birds of a feather, flock together), அதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா? அதனால் தான் இன்றிரவு நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள். அதனால் தான் நாம் இன்றிரவு கூடியிருக்கிறோம். நமக்குள்ளே பொதுவான காரியங்கள் இருக் கின்றன. அதனால்தான் நீங்கள் இன்றிரவு கேளிக்கை விடுதிகளுக்கோ, சினிமாக்களுக்கோ செல்லவில்லை. நீங்கள் இன்றிரவு தேவனுடைய சபைக்கு வந்திருக்கிறீர்கள். நம்மிடம் பொது வான காரியங்கள் உள்ளன. நாம் காரியங்களைக் குறித்துப் பேசவும், ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளவும் விரும்புகிறோம். நாம் அனைவரும் ஒரே மாதிரியான காரியங்களை விசுவாசிக்கிறோம். நமக்கு ஒரே நோக்கம் இருக்கிறது. அதனால்தான் இந்த ஊழியர்கள் அனைவரும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். நமக்கு... அதனால்தான் அந்த ஆவியானவர் நம் மத்தியில் இப்படி அசைவாடுகிறார். நமக்குள்ளே பொதுவான காரியங்கள் இருக்கின்றன. 7 இயேசு, உங்களுக்குத் தெரியும், பரிசுத்த ஆவியானவர் இறங்கியபோது, அவர்கள் ஓரிடத்தில் ஒருமனப்பட்டிருந்தார்கள், எல்லாம் பொதுவானதாக இருந்தது. பரிசுத்த ஆவியா னவர் வருவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பொதுவான காரியங்கள் இருந்தன. ஒவ்வொருவரும் பிதாவின் வாக்குத் தத்தத்திற்காகக் காத்திருந்தார்கள். அதனால்தான் நாம் இன்றிரவு இங்கே இருக்கிறோம். நமக்குள்ளே பொதுவான காரியங்கள் இருக் கின்றன, ஏனென்றால், "எங்கே இரண்டு மூன்று பேர் என் நாமத்திலே கூடி இருக்கிறார்களோ, அவர்கள் நடுவிலே நான் இருப்பேன். அவர்கள் எதைக் கேட்டாலும், அதை அவர்களுக்குக் கொடுப்பேன்" என்று இயேசு சொன்னார். எனவே இப்போது, நமக்குள்ளே பொதுவான காரியங்கள் உள்ளன. நாம் முழு சுவிசேஷத்தை விசுவாசிக்கிறோம். நாம் பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம். இயேசுவின் இரண்டாம் வருகையை நாம் விசுவாசிக்கிறோம். தெய்வீக சுகத்தை நாம் விசுவாசிக்கிறோம். அதனால்தான் நாம் அனைவரும் கூடி வந்திருக் கிறோம்... நம்மிடம் பொதுவான காரியங்கள் உள்ளன. "இனம் இனத்தோடு சேரும்." உங்களுடைய வகையைச் சேர்ந்த இறகுகளை (சுபாவத்தை) நான் பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எனவே நம்மால் இந்த ஐக்கியத்தைக் கொள்ள முடிகிறது. 8 இப்போது, "இனம் இனத்தோடு சேரும்" என்ற அந்தப் பழைய பழமொழி உண்மைதான். நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக, காகங்களையும் புறாக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவைகள் ஒன்றுக் கொன்று எந்த ஐக்கியமும் கொள்வதில்லை. ஏன் தெரியுமா? அவற்றின் உணவுமுறை வேறு பட்டது. அவைகளால் ஒன்றையொன்று உணவருந்த அழைக்க முடியாது, ஏனென்றால் காகம் அழுகினதைத் தின்னும் ஒரு பறவை (scavenger). அது எங்காவது பழைய செத்த சடலத்தைத் தின்னும், ஆனால் புறாவிற்கு பித்தப்பை கிடையாது. எனவே அது அந்த அசுத்தத்தைச் சாப்பிட்டால், அது அதைக் கொன்றுவிடும். பாவிக்கும் கிறிஸ்தவனுக்கும் உள்ள மிகச் சிறந்த படம் இது, அதாவது அவன் உண்மையான கிறிஸ்தவனாக இருக்கும்போது. புரிகிறதா? இப்பொழுது, புறா ஒரு கோதுமை வயலில் இறங்கி, நாள் முழுவதும் தன் இனத்தோடு சாப்பிட்டுக் கொண்டும், கூவிக் கொண்டும் இருக்கும். ஆனால் அந்தக் கிழட்டு காகம் அங்கே ஒரு பழைய செத்த சடலத்தின் மேல் உட்கார்ந்து, கரைந்து கொண்டும், நாள் முழுவதும் தின்று கொண்டும் இருக்கும். பார்க்கிறீர்களா? அவைகளுக்குள் எந்த ஐக்கியமும் இல்லை. ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், புறா சென்று அந்தச் செத்த சடலத்தைச் சாப்பிட்டால், அது புறாவைக் கொன்றுவிடும். ஆனால் காகத்தால் அங்கே சாப்பிடவும் முடியும், மேலும் கோதுமையையும் சாப்பிட முடியும். அது அவனை ஒரு மாயக்காரனாக்குகிறது. புரிகிறதா? எனவே நீங்கள் அதைக் கவனிக்க வேண்டும். பார்க்கிறீர்களா? நீங்கள் அதைக் கவனிக்க வேண்டும். புரிகிறதா? 9 புறா, அதாவது உண்மையான கிறிஸ்தவன், உலகத்திற்குள் சென்று அதில் ஈடுபட முடியாது, ஆனால் மாயக்காரன் ஒரு கீழ்த்தரமான மாயக்காரனாகவும், பாவியாகவும் இருந்து கொண்டே, வெளியே சென்று கிறிஸ்தவனைப் போலவும் நடிக்க முடியும். அது மோசமானது. அது மிகவும் மோசமானது. ஆனால் உண்மையான கிறிஸ்தவனால் இங்கே வந்து இதில் பங்குபெற முடியாது; அவனுக்குப் பித்தப்பை இல்லை. அவனால் அந்தக் காரியத்தைச் ஜீரணிக்க முடியாது. ஆமென். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது என்று நம்புகிறேன். பாவியே, நான் உங்கள் மனதை நோகடிக்க முயற்சிக்கவில்லை, ஆனால் அதுதான் சரி. அது அப்படித்தான் இருக்கிறது. புரிகிறதா? அவனால் ஒரு மதுபானக் கடைக்குள் சென்று குடிக்கவோ, வெளியே சென்று சூதாடவோ, அதுபோன்ற காரியங்களைச் செய்யவோ முடியாது. அதை ஜீரணிக்க அவனுக்குப் பித்தப்பை இல்லை. அவ்வளவு தான். வேறு ஏதோ ஒன்று நடந்திருக்கிறது; அவன் மாற்றப்பட்டிருக்கிறான். அவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. ஆமென். தேவன் அவனுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்தபோது, அவனை அறுவை சிகிச்சை மேஜையில் படுக்க வைத்து, அவனிடமிருந்து பித்தப்பையை எடுத்து விட்டார். இனிமேலும் அவனால் அந்தக் காரியங்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதுதான் சரி. எனவே அவனால் ஐக்கியம் கொள்ள முடியாது. 10 ஆனால் இந்தப் பரிசேயனிடம் ஏதோ தவறு இருக்கிறது, இப்போது, என் கருத்துப்படி, அவன் காகம். ஆனால் அவன் இயேசுவோடு ஐக்கியம் கொள்ள விரும்பு பவனைப் போல, அவரை அங்கே கீழே கொண்டுவர முயற்சிக்கிறான், ஆனால் ஏதோ தவறு இருக்கிறது. அது வேலை செய்யாது. முதலாவது... பரிசேயன் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? "பரிசேயன்" என்ற வார்த்தைக்கு "நடிகன்" என்று அர்த்தம். பரிசேயன் என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கு "ஒரு நடிகன்", அதாவது நடிப்பவன், வேஷம் போடுபவன் என்று அர்த்தம். உங்களுக்குத் தெரியும், அமெரிக்கா எப்படியும் அதனால், நடிகர்களால் நிறைந்திருக்கிறது. நான் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரசங்கிக்கிறேன். எனது அடுத்த கூட்டம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறது. அங்கே நான் கவனித்திருக்கிறேன், அங்கே உள்ள மக்களை, திரைத்துறை மக்களை, சினிமாக்காரர்களை எடுத்துக் கொண்டால்... அவர்கள் கேமராவுக்கு முன்னால் அதிகமாக இருப்பதால், வேறொருவரைப் போல நடிக்கிறார்கள், வேறொருவரைப் போலப் பாவனை செய்கிறார்கள். அவர்கள் கேமராவுக்கு முன்னால் அதை அதிகமாகச் செய்வதால், தெருவில் வரும்போதும்கூட, அவர்கள் நடிகர் களாகவே இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், அது ஹாலிவுட்டில் மட்டுமல்ல; அது சிகாகோவிலும் இருக்கிறது. நீங்கள் தொலைக்காட்சிகளையும் சினிமாக் களையும் அதுபோன்றவற்றையும் பார்க்கிறீர்கள், பின்னர் அதுபோல நடிக்க முயற்சிக்கிறீர்கள். பரிசேயனே, அதைச் செய்வதை நிறுத்து. அது சரியல்ல. நீங்கள் அப்படி இருக்கக்கூடாது. எனக்கு அந்தக் காரியங்கள் பிடிக்காது. நான் இயல்பாக (original) இருக்க விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? நீங்களாகவே இருங்கள். 11 உங்களுக்குத் தெரியும், பல நேரங்களில் அது பிரசங்கியார்களுக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அது உண்மை. நடிகர்கள், அவர்கள் பிரசங்கபீடத்தில் ஏறுகிறார்கள், பின்னர் அவர்களுக்கு ஒரு பிரசங்கபீடக் குரல் வந்து விடுகிறது, "நன்றாக, உங்களுக்குத் தெரியும், சகோதரர்களே." "ஓ, பரிசேயனே, அப்படி நடிப்பதை நிறுத்து. பேசு, நீயாகவே இரு. நீங்கள் நீங்களாகவே இருந்தால் மக்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள்." ஓ, ஆனால் அவர்களிடம் ஒரு பிரசங்கபீடக் குரல் இருக்கிறது, அப்புறம் ஒரு தெருவோரக் குரல் இருக்கிறது. அவர்கள் தெருவில் இருப்பதைப் போலவே பிரசங்கபீடத்திலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதே நபராக இருங்கள்; ஒரு பரிசேயனாக இருக்காதீர்கள். உங்களுக்குத் தெரியும், நமது சகோதரிகளில் சிலருக்கும் அது தொற்றிக்கொள்கிறது: நடிகர்கள். வீட்டில் அவர்கள், "ஜான்" என்று சொல்வார்கள். ஜான் சுடப்பட்டவனைப் போலத் துள்ளுவான். "இங்கே வா. அதைவிட உனக்கு நன்றாகத் தெரியும். அதை ஏன் செய்தாய்?" தொலைபேசி மணி அடிக்கிறது, ரிசீவரை எடுக்கிறார்கள், "ஓ, ஹலோ." பரிசேயனே, அதைச் செய்வதை நிறுத்து. இயல்பாக இரு. நீயாகவே இரு. ஓ, எனக்குப் பாசாங்கு செய்வது பிடிக்காது. நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். உண்மையாக இருக்கும் மக்களைப் பார்க்க நான் விரும்புகிறேன். 12 சிறிது நேரத்திற்கு முன்பு அந்த அழகான, பரிசுத்த ஆவியின் பாடலை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். பாடகர்களிலும் நிறைய நடிகர்களை நீங்கள் காண்கிறீர்கள். அது உண்மை. நான் பாடகர்களைப் பார்த்தி ருக்கிறேன்... நான் ஒருமுறை ஒரு இடத்திற்குச் சென்றிருந்தேன், அங்கே அதிகப்படியான பயிற்சி பெற்ற குரலைக் கண்டேன், முகம் நீல நிறமாக மாறும் வரை ஒரு ஸ்வரத்தை இழுத்துப் பிடித்து, உயிருக்காகப் போராடுவது போலப் பிடித்துக்கொண்டு, கீழே வந்து, ஏதோ அருள்வாக்குச் சொல்வது போலச் செய்தார்கள், அவர்களுக்கே அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்று தெரியவில்லை. அது நல்லதல்ல. அவர்கள் தேவ மகிமைக்காகப் பாடவில்லை. என்னைப் பொறுத்தவரை, கைகளை உயர்த்தி தேவ மகிமைக்காகப் பாடும் பழைய பாணி பெந்தெகொஸ்தே பாடல்களை நான் விரும்புகிறேன். ஆர்கன், பியானோ மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தேவ மகிமைக்காகப் பாடுங்கள். ஆமென். கட்டவிழுந்து நீங்களாகவே இருங்கள். ஆம், நான் இயல்பானதை விரும்புகிறேன். தேவனுடைய மகிமைக்கு, அந்த உண்மையான அழகான பாடலைக் கேட்பதை விடப் பரலோகத்திற்கு நெருக்கமானது வேறொன்று மில்லை. நீங்கள் அப்படி நம்பவில்லையா? 13 சிறிது நேரத்திற்கு முன்பு அந்தத் திரைச்சீலைக்குப் பின்னால் அமர்ந்து என் கண்களிலிருந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தேன், அந்தச் சகோதரர்கள் பாடுவதைக் கேட்டபோது. திரைச்சீலை வழியாக எட்டிப் பார்த்தேன்; அவர்கள் முகத்தில் தேவனுடைய மகிமையைக் கண்டேன். ஓ, ஆச்சரியம். உங்களுக்குள் ஜீவன் இருந்தால், அது நிச்சயமாக அதை மேலே கொண்டு வரும். அதுதான் சரி. ஆனால் நீங்கள் அந்தப் பக்கம் போய், பிடித்துக்கொண்டு, முகம் நீல நிறமாக மாற வேண்டிய நிலைக்குச் சென்றால், யாராவது உங்களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம். புரிகிறதா? எனக்கு உண்மையான பாடல் பிடிக்கும். நான் நீங்களாகவே இருக்க விரும்புகிறேன், ஒரு நடிகனாக, பரிசேயனாக அல்ல. அது மோசமானது. 14 சூரியன் அஸ்தமிக்கும் நிலையிலிருந்தது, அவர் அங்கே நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். இந்தத் தூதுவன் நாள் முழுவதும் ஓடியிருந்தான், அவனது கால்கள் அழுக்காகவும், முகம் வியர்வை நிரம்பியதாகவும் இருந்தது. அவனது எஜமானன் அவனிடம், "இப்போது, நீ அவரைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று சொல்லியிருந்தார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவன் பாலஸ்தீனத்தைக் கடந்து வந்தான். சூரியன் மறையப் போகிறது. ஒரு மனிதனும் அவரைப் போலப் பேசினதில்லை என்று சொல்லத்தக்க அந்த ஒருவர் பேசுவதை ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். மக்கள் தங்கள் கால் விரல்களால் எம்பி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் பார்க்க மட்டுமே முடிந்தது... அந்தப் பணக்காரப் பரிசேயனின் வீட்டிலிருந்து வந்திருந்த தூதுவன், அவன் என்ன பார்க்க முடியும் என்று தன் கால்விரல்களால் எம்பி நின்று பார்ப்பதை என்னால் காண முடிகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் பேசுவதை நிறுத்தினார்; பின்னர் அவர் வியாதியஸ் தர்களுக்கு ஊழியம் செய்யத் தொடங்கினார். ஓ, நானும் அங்கே இருந்திருக்க விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? 15 இந்தத் தூதுவன் கூட்டத்தின் வழியாக வழி ஏற்படுத்திக்கொண்டு வருவதை நான் காண்கிறேன், அவன் அங்கே நின்று கொண் டிருந்த யாரோ ஒருவர் மீது மோதுகிறான், அவர் அவனை மேலே செல்ல விடவில்லை. ஒருவேளை அது பிலிப்புவாகவோ, அல்லது நாத்தான்வேலாகவோ, அல்லது அவர்களில் ஒருவராகவோ இருக்கலாம். அது யாரென்று எனக்குத் தெரியவில்லை. அங்கே நின்று கொண்டிருந்த யாரோ ஒருவர் மீது அவன் மோதினான். "ஐயா, நான் உங்கள் எஜமானரிடம் பேச விரும்புகிறேன்" என்று சொன்னான். அவர் ஒவ்வொருவராக ஜெபிக்கும்படிக்கு, இயேசுவிடமிருந்து மக்களை விலக்கி வைப்பதில் மும்முரமாக இருந்தார்கள். அவர் அவனைப் பின்னுக்குத் தள்ளி... "விலகி நில்லுங்கள். போதகரைத் தனியே விடுங்கள். அவர் வேலையாக இருக்கிறார்" என்று சொல்வதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. பின்னர் அவன் மீண்டும் முண்டியடித்துக் கொண்டு; "ஆனால் எனக்கு என் எஜமானரி டமிருந்து ஒரு செய்தி இருக்கிறது, எங்கள் நாட்டில் அவர் மிக முக்கியமான நபர். நான் உங்கள் போதகரைப் பார்த்தே ஆக வேண்டும்" என்று சொன்னான். 16 அப்போது பிலிப்பு, அனேகமாக, இயேசு இருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் செல்வதை என்னால் காண முடிகிறது. அவன் அவர் முன்பாகப் பணிவுடன் வணங்கி, அவரிடம் செய்தியைத் தெரிவித்தான், "என் எஜமானர், பரிசேயனாகிய சீமோன், ஒரு பெரிய மனிதர், அவர் சபையில் பெரியவர். நீர் கனம் பண்ணப்படுவீர், ஐயா. அவர் ஒரு குறிப்பிட்ட தேதியில் தன்னுடைய விருந்துக்கு வரும்படி உமக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அவர் ஒரு பெரிய விருந்து வைக்கப் போகிறார், அவர் ஒரு பணக்காரர். மேலும் அவர்... ஓ, அவரால் ஒரு உண்மையான விருந்தைப் படைக்க முடியும். நீர் வருவதற்கு அழைக்கப்படுகிறீர்." பேதுரு அவனிடம் என்ன சொல்லி யிருப்பார் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அனேகமாக நானும் நீங்களும் சொல்வது போல, "ஓ, இயேசுவே, அந்தப் பரிசேயன், உம்மை ஒரு விளம்பரப் பொருளாக (trump card) ஆக்கப் பார்க்கிறான். ஏன், அவருக்கு நீர் தேவையில்லை. அவருக்குத் தேவையான இந்த உலகின் செல்வம் எல்லாம் அவரிடம் இருக்கிறது, அவருக்கு உம்முடைய தேவை எதுவும் இல்லை. அவர் ஒரு காட்சியை உண்டாக்க - உம்மை ஒரு காட்சிப் பொருளாக ஆக்கவே அவர் அப்படிச் செய்கிறார். அவ்வளவு தான். போகாதேயும். உம்மை அழைக்கும் ஆயிரக்கணக்கானோரை இங்கே பாரும். உம்முடைய நேரம் இங்கே தேவைப்படுகிறது. அந்தப் பரிசேயனிடம் அங்கு போகாதேயும்." ஒருவேளை அந்திரேயா ஓடி வந்து, "இயேசுவே, அதைச் செய்யாதேயும், ஆண்டவரே. அங்கே போகாதேயும்" என்று சொல்லியிருக்கலாம். ஆனாலும், அவர்களால் முடிந்த அளவு வற்புறுத்திய போதிலும், இயேசு பணிவாக, அவர் தலைவணங்கி, "நான் அங்கே இருப்பேன்" என்று சொல்வதை என்னால் காண முடிகிறது. 17 இயேசு அழைக்கப்பட்டால் ஒழிய, ஒருபோதும் வருவதில்லை. அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரை உங்கள் வீட்டில் விரும்பினால், அவரை அழையுங்கள். அவர் வருவார். நீங்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பணக்காரராக அல்லது எவ்வளவு ஏழையாக, எவ்வளவு மோசமான நிலையில் அல்லது எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும், நீங்கள் அவரை அழைத்தால் அவர் வருவார். அவர் ஒருபோதும் அழைப்பை நிராகரிப்பதில்லை. இயேசு ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை, இனியும் செய்ய மாட்டார். அவர்கள் பார்க்கிறார்கள்... அவர் வணங்கிவிட்டுச் சென்றார்... அந்தத் தூதுவன் கொஞ்சம் பெருமூச்சு விட்டான், ஓ, தனது அழுக்கான முகத்திலிருந்து தலைமுடியைப் பின்னால் ஒதுக்கிவிட்டு, பாலஸ்தீனத்தின் குறுக்கே தன் செய்தியைத் திரும்பக் கொண்டு செல்லப் போகிறான். அவனால் எப்படி அதைச் செய்ய முடிந்தது? அந்தத் தூதுவனுக்கு, ஓட்டப்பந்தய வீரனுக்கு, தன் எஜமானின் வீட்டு வேலையாளுக்கு என்ன நேர்ந்தது? அவனால் எப்படி அதைச் செய்ய முடிந்தது? நான் அதைவிட வித்தியாசமாக ஏதோ சொல்லியிருப்பேன், நீங்கள் சொல்லி யிருக்க மாட்டீர்களா? நான் எப்போதாவது இயேசுவின் பிரசன்னத்தில் வந்திருந்தால், நான் முதலில் அவருடைய பாதத்தில் விழுந்து அவரை வணங்கியிருப்பேன். 18 ஆனால் இன்றைக்கு நம்மில் அநேக தூதுவர்களுக்கு அதுதான் பிரச்சினையாக இருக்கிறது. நாம் நமது சபைப் பிரிவைப் பற்றிப் பேச வேண்டும், நாம் சார்ந்திருக்கும் எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும், இயேசுவின் பிரசன்னத்தில் இருப்பதை மறந்து விடுகிறோம். நாம் சிந்திக்க வேண்டிய காரியங்கள் மிக அதிகமாக உள்ளன, இயேசுவை விட மற்ற காரியங்கள் நமக்கு அதிக ஆர்வமூட்டுவதாகத் தோன்றுகின்றன: அந்தஸ்து, நாம் நம்மை எப்படி நடத்திக் கொள்கிறோம், நம் குரலை எப்படி ஒலிக்கச் செய்வது, எப்படி இந்த நிகழ்ச்சியையும் அந்த நிகழ்ச்சியையும் நடத்துவது. அதை மறந்துவிடுங்கள். நமக்குத் தேவையானது இயேசுவின் பிரசன்னத்தில் வந்து அவரைத் தொழுதுகொள்வதுதான். சில நேரங்களில் நாம் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்துகிறோம், பெண்கள் சங்கம் அவர்களுடைய காரியத்தைச் செய்ய வேண்டும், இது இதைச் செய்ய வேண்டும், அது அதைச் செய்ய வேண்டும். முதலில் உங்களுக்குத் தெரியுமா, இயேசுவுக்கு இடமே இல்லை. நமது சங்கங்கள் மற்றும் காரியங்களிலேயே நாம் மூழ்கிப்போய், எழுப்புதல் எதைப் பற்றியது என்பதையே மறந்து விடுகிறோம். இந்த வாரம் சிகாகோவில் நாம் அதைச் செய்ய வேண்டாம். நாம் அவரை அழைப்போம், பின்னர் அவர் வரும்போது அவரைத் தொழுதுகொள்வோம். நாம் அவர் பிரசன்னத்தில் வரும்போது, நீங்கள் யார் என்பதை மறந்துவிடுங்கள். எப்படியிருந்தாலும் நீங்கள் யார்? ஆறு அடி மண் (அது சரி), நீங்கள் நூற்று ஐம்பது பவுண்டு எடை இருந்தால், எண்பத்து நான்கு சென்ட் மதிப்புள்ளது: எப்படியிருந்தாலும் உங்களுக்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. 19 ஆக, இங்கே அவன் இயேசுவின் பிரசன்னத்தில் இருந்தான், தன் எஜமானின் கட்டளைகளை நிறைவேற்றினான். அவன் பேசிக் கொண்டிருந்த மனிதர் ஒரு நாள் நியாயாதிபதியாக இருப்பார், அதை அவன் அங்கீகரிக்கத் தவறிவிட்டான். பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து மக்களிடம் பேசி, அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டி, குருடர், செவிடர், ஊமையர், பக்கவாதக்காரர்கள் போன்றோரைக் குணமாக்கும் இந்தக் கூட்டங்களில், மக்கள் சில சமயங்களில், "நல்லது, நாங்கள்... அவர்கள் இன்றிரவு சபையை வெகுநேரம் நடத்தி விட்டார்கள்" என்று சொல்லித் திரும்பி விடுகிறார்கள். பரிசேயனே, உனக்கு என்ன ஆயிற்று? நீ கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறாய். 20 அவருடைய வார்த்தை அசைவாடுவதை நீங்கள் எப்போதாவது உறுதியாகக் கண்டால், நீங்கள் முகங்குப்புற விழுந்து, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்ல வேண்டும். ஆனால் மற்ற காரியங்களுக்கு நமக்கு நேரம் இருக்கிறது. "ஓ, அவர் சீக்கிரம் முடித்துப் பிரசங்கத்தை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். எந்தப் பிரசங்கியாரும் பிரசங்கிக்க இருபது நிமிடங்களே போதுமானது." ஏன், நீங்கள் பட்டினியால் சாகிறீர்கள். நீங்கள் மிகவும் மெலிந்து போய் ஒரு நிழல் போல இருக்கிறீர்கள். சில நேரங்களில் சுவிசேஷ வைட்டமின்களால் உங்களைக் கொழுக்க வைக்க, உங்களுக்கு ஒரு நல்ல நான்கு மணி நேரப் பிரசங்கம் தேவை. அதுதான் இன்றைக்குச் சபைக்குத் தேவை. நிறுத்துங்கள்... உங்கள் போதகரை... மறுநாள் ஒரு நபர் சொன்னார்... இது ஜோக் சொல்வதற்கான இடமல்ல; நான் அதை நம்பவில்லை. ஆனால் அவர், பத்து வருடங்களாக ஒரு பிரசங்கம் பண்ணினதாகச் சொன்னார். இருபது நிமிடங்கள் மட்டுமே மக்கள் அவரைப் பிரசங்கிக்க அனுமதிப்பார்கள், அவர் தன்னை இருபது நிமிடங்களுக்குள் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் சுமார் ஒரு மணி நேரம் பிரசங்கித்தார். 21 டீக்கன்கள் அவரைத் தனியே அழைத்து, "போதகரே, ஏன் அப்படிச் செய்தீர்?" என்று கேட்டார்கள். அவர், "நன்றாக, என் டைம் மெஷின் (கடிகாரம்) சரியாக வேலை செய்யவில்லை" என்றார். "என்ன அது?" என்று கேட்டார்கள். அவர், "நான் பிரசங்கிக்கத் தொடங்கும் போது வாயில் ஒரு மிட்டாயைப் (lifesaver) போட்டுக்கொள்வேன், அதைச் சப்பி முடிக்க எனக்கு எப்போதும் இருபது நிமிடங்கள் ஆகும்" என்றார். மேலும், "இன்று காலை நான் அதைத் தவறவிட்டு, ஒரு பட்டனை (button) என் வாயில் போட்டுக்கொண்டேன், அதை என்னால் கரைக்கவே முடியவில்லை" என்றார். ஓ, என்னே. இன்று நமக்குத் தேவை சில நல்ல பழைய பட்டன் பிரசங்கங்கள். ஆமென். அவசரப்பட வேண்டாம். 22 அந்த நபர், தனது செய்தியைச் சொல்லி, தான் எதற்காக வந்திருந்தானோ அதை முடித்தவுடன், அவரது நோக்கம் தனது எஜமானனைப் பிரியப்படுத்துவதாக மட்டுமே இருந்தது, அவன் போய்விட்டான். இன்று நமக்குத் தேவை, "காத்திருங்கள். அங்கேயே இருங்கள்." இங்கே அவன் செல்கிறான். பாலஸ்தீனம் முழுவதும் கீழே செல்ல வேண்டியிருந்தது. ஓ, அந்தப் பெரிய பரிசேயன், அவன் திரும்பி வந்து இயேசு வருவதாகச் சொன்னதைத் தெரிவித்தபோது எப்படியிருந்திருப்பான் என்று என்னால் காண முடிகிறது. அவன் தன் தரையிலுள்ள பெரிய பாரசீக விரிப்புகளின் மேல் முன்னும் பின்னும் நடந்து கொண்டு, தனது சிறிய, குண்டான, சப்பையான கைகளைத் தேய்த்துக் கொண்டு இருப்பதை என்னால் காண முடிகிறது. "ஹா, ஹா, ஹா, இதை ஏன் நான் முன்பே நினைக்கவில்லை." 23 அவன், "ஆஹா. நான் ஒரு பெரிய விருந்து வைக்கப் போகிறேன். நான் பரிசேயனாகிய சீமோன் என்று எல்லோருக்கும் தெரியும். ஓ, நான் மிகவும் பக்திமான்." ஹும். அப்படிப்பட்டவர்கள் இன்னும் நம்மிடம் இருக்கிறார்கள். "ஓ, நான் சபையின் டாக்டர் (Doctor of the church) என்று உங்களுக்குத் தெரியும். இந்த நகரத்தில் உள்ள அனைவரும் என்னைப் பார்க்கிறார்கள், நான் ஒரு பக்திமான் என்று அவர்களுக்குத் தெரியும், ஏனென்றால் நான் போதகர் சீமோன், பரிசேயன்." 24 அந்தப் பெரிய குண்டான உருண்டை வடிவ பரிசேயன், என் ஆண்டவராகிய இயேசுவை அங்கே வரவைக்கத் தரை எங்கும் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறான். "ஏன், அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல. நிச்சயமாக அவர் இல்லை. ஓ, அவரிடம் ஒன்றுமில்லை என்று பரிசேயர்களாகிய எங்களுக்குத் தெரியும். இது மனதின் தந்தி முறை (mental telepathy). அவரை இங்கே வரவழைத்து நான் கொண்டு வந்தால்... பரிசேயன் ஜோன்ஸ் அதைப் பற்றி என்ன சொல்வார்? ஹோ, ஹோ. அது ஒரு வேடிக்கையாக இருக்காதா? ஹோ, ஹோ. என்னுடைய கூட்டத்திற்கு, இப்போது என் விருந்துக்கு அந்தப் போலித் தீர்க்கதரிசியை வரவழைத்திருக்கிறேன் என்று பரிசேயன் ஜோன்ஸ் கேள்விப்படும்போது, நசரேயனாகிய இந்த இயேசு என் விருந்துக்கு வந்திருப்பதைப் பார்க்கும்போது அவர் ஆச்சரியப்பட மாட்டாரா." "நான் என்ன செய்வேன் என்று சொல்கிறேன். நான் அதை உள்ளே வைக்க மாட்டேன். நான் அதை வெளியே வைப்பேன், ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், என்னால் உண்மையிலேயே ஒரு விருந்தை, ஒரு உண்மையான விருந்தை ஏற்பாடு செய்ய முடியும். இங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஏழைகள் மற்றும் எல்லாம்." ஆனால் அந்த மனிதன் பணக்காரன். சகோதரனே, அவனுக்குச் சம்பளத்தைத் தவிர ஆலயத்திலிருந்தும் பங்கு கிடைத்தது, அவனால் உண்மையிலேயே ஒரு விருந்தைப் படைக்க முடியும். எனவே அவன் தகுதியுள்ளவன்; அவனிடம் நிறையப் பணம் இருந்தது. அவன் ஒரு பணக்காரன். 25 அவன் சொன்னான், "ஆகவே பொது மக்களை, என் இடத்திற்கு முன்பாக, தாழ்வாரத்தில் எங்காவது நான் கூட்ட முடிந்தால்; நான் அதை அங்கே அமைத்து, என் மேஜைகளைப் போடுவேன். அந்தப் பெரிய திராட்சைக் குலைகள் இப்போதுதான் பழுத்திருக்கின்றன, எல்லாம் நல்ல வாசனை வீசும். மாலையில் அதை வைப்பேன்; அது குளிர்ச்சியாக இருக்கும். ஓ, அது எப்படி எல்லாம்..." அவன் அதை எப்படி ஏற்பாடு செய்வது, எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் எப்படி வைப்பது என்று அனைத்தையும் திட்டமிட்டிருந்தான். 26 "நான் என் மேஜையை எடுத்து அங்கே நகர்த்தி வைப்பேன், டாக்டர் ஜோன்ஸ் மற்றும் டாக்டர் பி.எச்.டி (Ph.D.) மற்றும் இன்னார், மற்றும் இன்னார் என எல்லோரையும் நான் வரவழைப்பேன். அப்போது நான் ஒரு பெரிய மனிதன் என்று நகரத்திலுள்ள மக்கள் அனைவரும் அறிந்துகொள்வார்கள். என்னால் இதைச் செய்ய முடியும், என்னால் அதைச் செய்ய முடியும். நான்-நான்-நான்... அப்பா, மக்களுக்கு இருக்கும் எவ்வளவு பயங்கரமான பழக்கம் இது, இல்லையா? "நான்-நான்-நான்..." இதில் தேவனுக்கு எந்த இடமும் இல்லை. ஓ, அவனால் என்ன வெல்லாம் செய்ய முடியும், இயேசுவுடனான இந்த சந்திப்பைப் பெற அவன் இதை முன்பே யோசித்திருக்க வேண்டும். இப்போது, அவன், "நான் என் மேஜையை வெளியே தள்ளுவேன்" என்றான். இப்போது, கீழை நாடுகளில், அவர்கள் எப்படிச் சாப்பிடுவார்கள் மற்றும் காரியங்களைச் செய்வார்கள் என்பதை அறிய நீங்கள் கிட்டத்தட்ட அங்கே இருக்க வேண்டும். 27 இப்போது, உங்களுக்குத் தெரியும், நிறையச் சிறு பிள்ளைகள், உதாரணமாக, இங்கே முன்பாகக் கட்டம் போட்ட சட்டை அணிந்து அமர்ந்திருக்கும் இந்தச் சிறுவன். அவன் இப்படித் தன் கையின் மேல் சாய்ந்திருக்கிறான். அப்பாவும் அம்மாவும் அவனுக்கு அப்படிச் சாப்பிடப் பிடிக்கும் என்று அறிவார்கள் (ஆம்) மேஜையில்; அவன் தன் கையின் மேல் சாய்ந்துகொள்ள விரும்புகிறான். இப்போது, எனக்கும் வீட்டில் சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள், அவர்கள் அப்படிச் சாப்பிட விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்வது சரிதான். அம்மா உங்களை இப்படி நிமிர்ந்து உட்கார வைக்க முயற்சிக் கிறார்கள், ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு அவர்கள் அப்படித்தான் செய்தார்கள். இயேசு அப்படித்தான் சாப்பிட்டார். புரிகிறதா? நாம் செய்வதைப் போல அவர்கள் மேஜையில் உட்காரவில்லை. அவர்களிடம் ஒரு பெரிய மேஜை இருக்கும், பின்னர்... அவர்கள் சாப்பிடும்போது ஒரு மெத்தையை, இது போலக் கோணலாக உள்ளே தள்ளுவார்கள், எல்லோரும் உட்காருவதற்குப் பதிலாக, அவன் இங்கே கீழே போய் மெத்தையின் நுனியில் உட்கார்ந்து, படுத்துக்கொண்டு தன் கையை இப்படி வைத்து, அந்த வழியில் சாப்பிடுவான். உங்களுக்கு அப்படித்தானே பிடிக்கும், இல்லையா? ஆம், ஐயா. நல்லது, இயேசு அப்படித்தான் சாப்பிட்டார். பாலஸ்தீனத்தில் அந்த நாட்களில் அவர்கள் அப்படித்தான் சாப்பிட்டார்கள்: இன்னும் செய்கிறார்கள். 28 இப்போது, அந்த மேஜையை வெளியே வைத்திருந்தான், ஓ, அவர்களால் பரிமாற முடிந்தது. ஆச்சரியம், அவர்கள் உண்மை யிலேயே பரிமாறினார்கள். அவர்கள்... பாலஸ் தீனத்திலுள்ள அந்த மக்களில் சிலர், அந்தப் பரிசேயர்கள் இந்தியப் பணிப்பெண்ணை (Indian waitress) வைக்கும் அளவுக்குப் பணக்காரர்களாக இருந்தார்கள்... பணியாளர்கள் (waiters), அவர்கள் உலகில் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் காலணிகளை அணிந்திருந்தார்கள்... முனையில் சிறிய மணிகள் இருக்கும், அவர்கள்... அவர்கள் நடக்கும்போது அது இசை எழுப்பும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் தட்டை இப்படித் தங்கள் கையில் வைத்து, ஆட்டுக்குட்டியை - மசாலாப் பொருட் களுடன் நன்றாகச் சமைத்து வைத்திருப்பார்கள். ஓ, ஆச்சரியம், அவர்கள் அதை வெளியே கொண்டு வருவார்கள், ஏழைகள் வெளியே நின்று [சகோதரர் பிரான்ஹாம் முகரும் சத்தம் எழுப்புகிறார்] அந்த வாசனையை நுகருவார்கள், அதைப் பார்க்கவே உங்களுக்குப் பசியைத் தூண்டும் வகையில் அவர்கள் அதைப் பரிமாறுவார்கள். 29 எனவே அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது, அந்தப் பரிசேயர் களுக்கு அதை எப்படிச் செய்வது என்று தெரிந்திருந்தது. எனவே இந்த ஆளும் விதி விலக்கல்ல. ஒரு உண்மையான விருந்தை எப்படிப் படைப்பது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. எனவே அவன் எல்லாவற் றையும் தயார் செய்து, மக்கள் வருவதற்காக எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தினான். நல்லது, இறுதியாக மாலை நேரம் நெருங்கியது, அப்போதுதான் அவன் விருந்தை நடத்தப்போகிறான். உங்களுக்குத் தெரியும் முதல் விஷயம், தாழ்வாரத்திலும், முற்றத்திலும், திராட்சைக் குலைகளுக்குக் கீழும் எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டு, எல்லாம் அதனதன் இடத்தில், எங்கே இருக்க வேண்டுமோ அங்கே, எல்லாம் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தவுடன்... 30 ஒரு பெரிய ரதம் வெளியே வந்து நின்றது, டாக்டர் ஜோன்ஸ்... (இங்கே இன்றிரவில் டாக்டர் ஜோன்ஸ் என்று யாரும் இல்லை என்று நம்புகிறேன்.) ஆனால் எப்படியிருந்தாலும், அவர் ரதத்திலிருந்து வெளியே இறங்கினார். ஆச்சரியம், உங்களுக்குத் தெரியும், பாலஸ்தீனத்தின் விருந்தோம்பல் என்பது, அவர் - நீங்கள் ரதத்திலிருந்தோ அல்லது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்களோ அங்கிருந்து இறங்கியவுடன், நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், உங்களை அழைத்த எஜமானர்... நல்லது, முதலாவது நீங்கள் வருகிறீர்கள், அவர்களது பயணங்களில் பெரும்பாலானவை நடந்தே இருக்கும், டாக்டர் ஜோன்ஸ் இறங்கியபோது, நிச்சயமாக, பரிசேயன் உள்ளே போய் அவரை வரவேற்றான், "ஹலோ, டாக்டர் ஜோன்ஸ், உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் இடத்திற்குள் வாருங்கள்." மற்றொரு ரதம் வந்தது, குதிரைப் பராமரிப்பாளர்கள் அவர்களின் குதிரைகளை எடுத்துச் சென்று, லாயங்களில் விட்டு, தீனி போட்டு, அவ்வாறாகப் பராமரித்தார்கள். யாராவது நடந்தே வந்தால், அவர்கள்... அந்தப் பரிசேயர்கள் அனைவரிடமும் தங்கள் இடத்தில் நிறையக் கடைநிலை ஊழியர்கள் இருந்தார்கள்: ஒரு ஆள் ஒரு வேலையைச் செய்வான், இன்னொருவன் இன்னொன்றைச் செய்வான். முதலாவது காரியம் என்னவென்றால், நீங்கள் அந்த இடத்திற்குள் நுழையும்போது, அந்த மொத்தக் கூட்டத்திலும் மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் கடைநிலை ஊழியன் ஒரு கால் கழுவுகிறவன். நீங்கள் ஒரு இடத்திற்குள் நடக்கும்போது நீங்கள் செய்த முதல் காரியம் உங்கள் கால்கள் கழுவப்பட்டது. 31 நான் என் ஆண்டவரை நினைக்கிறேன்... அவர் தேவன் என்பதை எனக்கு நிரூபிப்பது இதுதான், அவர் பரலோகத்தின் மிக உயர்ந்த ஸ்தானத்திலிருந்து வந்து, பூமியிலே மிகத் தாழ்ந்த ஊழியரானார். மாற்றுவதற்கு ஒரு உடை வைத்திருப்பதால் நாம் யார் என்று நினைத்துக்கொள்கிறோம்? பரலோக தேவன் இறங்கி வந்து ஒரு ஊழியரானார். வீட்டில் உள்ள வகையறாக் களிலேயே மிக மோசமான சம்பளம் வாங்கும் நபர் கால் கழுவுபவர்தான். இயேசு, என் ஆண்டவர் ஒரு கால் கழுவுபவரானார். இப்போது நீங்கள் யார்? நான் யார்? ஒரு பெரிய காரில் சவாரி செய்யவும், எல்லாவற் றையும் செய்யவும், மூக்கை மேலே தூக்கி வைத்துக்கொண்டு நாம் ஏதோ பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்ளவும் நமக்கு என்ன பெருமை இருக்கிறது? பரலோக தேவன் ஒரு கடைநிலை கால் கழுவுபவராக மாறினார். நமக்குப் பிழைப்பு. என்ன ஒரு பரிதாபம். 32 வழக்கமாக, நாம் அழைக்கப் பட்டிருக்கும் போது மனிதனைச் சந்திக்கும் முதல் மனிதன், கீழ்த்திசை நாடுகள் மற்றும் பாலஸ்தீனத்தின் அன்றைய விருந்தோம்பலில், ஒரு... பயணம் நடந்தே இருந்தபோது, இங்கே இருப்பது போலத் தார்ச் சாலைகள் அவர்களிடம் இல்லை, புழுதி நிறைந்த சாலைகளே இருந்தன. பாலஸ்தீன உடை ஒரு அங்கி போலக் கீழே வரும், ஆனால் உள்ளே இருக்கும் ஆடை முழங்காலுக்குக் கீழே பட்டன் போடப்பட்டிருக்கும். அந்த நாட்களில் அவர்கள் அங்கிகளை அணிந்திருந்தபோது, செருப்புகளை வாங்க முடிந்தால் அணிந்திருப்பார்கள், அல்லது வெறுங்காலுடன் நடப்பார்கள்... அவர்களின் பயணம் நடந்தே இருந்தது. அவர்கள்... அந்தச் சிறிய பழைய பாதைகள் வழியாகவும் மற்ற இடங்களிலும் நடக்கும்போது, பல பயணக் கூட்டங்களும் விலங்குகளும் அந்தப் பாதையில் சென்றிருக்கும், விலங்குகளின் கழிவுகளைப் பறவைகள் கொத்தியிருக்கும், பின்னர்... சாலையில் சுற்றித் திரிந்திருக்கும், அது... அந்தத் தூசு காய்ந்து போயிருக்கும். அது தூசியாக மாறும், பயணி இப்படி நடக்கும்போது, ஏன், அந்தத் தூசி... அங்கி அதை அள்ளி வீசும், அது அவன் கால்களில் படியும், மேலும் விலங்குகளின் கழிவுகள் மற்றும் சாலையோரம் உள்ள அனைத்தும், நாற்றமடிக்கும் மற்றும்... ஒரு நபரின் கால்கள் அழுக்காகி, உண்மையிலேயே கழுவப்பட வேண்டியிருக்கும், அந்தப் பரிசேயனின் வீடு போன்ற ஒரு நல்ல வீட்டிற்குள் அவர்கள் நுழைவதற்கு முன்பாக. 33 எனவே வழக்கம் என்னவென்றால், அவர்கள் கால் கழுவும் வேலையாளைக் கொண்டு வருவார்கள். அவன் வெளியே வருவான், அந்த மனிதன் வந்ததும், அவன் அவர் காலை எடுத்து, இது போலத் தன் கையின் இடுக்கில் வைத்து, செருப்பைக் கழற்றி, கால்களைக் கழுவி, ஒரு துண்டை எடுத்துத் துடைத்து, அவர் செருப்புகளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, அவருக்குப் பொருத்தமான ஒரு ஜோடி சாடின் செருப்புகளை (satin slippers) எடுத்துக் கொடுப்பான், அது அவரை அழைத்த எஜமானரின் உபசரிப்பு. அவருக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்று கிடைக்கும் வரை அவர் அவற்றை அணிந்து பார்ப்பார். பிறகு... அடுத்த விஷயம் அவன் அவரை உள்ளே அனுப்புவான். அவர் திரும்ப வெளியே வரும்போது, அந்தச் செருப்புகளைக் கழற்றி விட்டு, அந்தச் சிறந்த விரிப்புகள் மற்றும் பொருட்களின் மீது நடப்பார், அவர் தன் கால்களால் புத்துணர்ச்சி அடைந்திருப்பார். 34 இப்போது, அடுத்த விஷயம், பாலஸ்தீனச் சூரியன், அங்கிருக்கும் நேரடிக் கதிர்கள், முகத்தை மிகவும் சூடாக்கி கொப்புளிக்கச் செய்யும். அவர்கள் பூசுவதற்குத் தைலம் வைத்திருந்தார்கள். அடுத்த மனிதர், அவர் ஒரு சிறிய இடத்திற்குள் வந்ததும், ஏன், அவர்கள் உங்களைப் பூசுவார்கள், உங்கள் கைகளில் கொஞ்சம் தைலம் கொடுப்பார்கள், நீங்கள் அதைத் தேய்த்து, உங்கள் கழுத்திலும் உங்கள் முகத்தைச் சுற்றிலும் அதுபோலப் பூசுவீர்கள், அது இதமாக இருக்கும். இப்போது, எண்ணெய் சில நாட்களில் பழையதாகிவிடும்; அது நமக்குத் தெரியும். ஆனால் அரேபியாவிலிருந்து வரும் ஒரு வகையான சிறிய விதை அவர்களிடம் இருந்தது, அது முடிந்ததும் ரோஜாவைப் போல இருக்கும், அங்கே ஒரு சிறிய கனி இருக்கும். நீங்கள் அந்தச் சிறிய கனியை எடுத்து உங்கள் கையில் வைத்துத் தேய்க்கலாம், அது வாசனை திரவியத்துடன் உங்கள் துவாரங்களுக்குள் ஆழமாகச் செல்லும், வாரக்கணக்கில் உங்கள் கைகளில் அதன் வாசனை இருக்கும். அவர்கள் அதை எடுத்து ஒரு வாசனை திரவியத்தைத் தயாரித்து, தங்கள் முகத்தைப் பூசுவதற்குப் பயன்படுத்தும் அந்தப் பூசு தைலத்தில் சேர்ப்பார்கள். 35 சாலொமோனுக்கு சேபாவின் ராணி கொண்டு வந்த பொக்கிஷங்களில் அதுவும் ஒரு பகுதி, மிகவும் விலையுயர்ந்தது, விலையேறப் பெற்ற தைலம் (spikenard). எனவே அவர்கள் - அவர்கள் முகத்தைப் பூசுவார்கள் மற்றும் பல. இப்போது, அவர் கால்கள் கழுவப்பட்டுத் துடைக்கப்பட்டன, செருப்புகள் போடப்பட்டன. சாலையின் நாற்றம் முழுவதும் அவரை விட்டு நீங்கியது. இப்போது, சூரியனின் கதிர்களுக்காக, அவர் தன் முகத்தை நன்றாகத் தேய்த்து, ஒரு துண்டை எடுத்து அதிலிருந்து எண்ணெயைத் துடைத்தார். இப்போது, அடுத்த உபசரிப்பு, அவர் வாசலுக்குள் நடந்தபோது எஜமானர் காட்டுவது, அவர் உள்ளே சென்றதும், தன் பார்வையாளர் வந்த போது எஜமானர் அங்கே நின்று கொண்டிருப்பார். அவர் வாசலுக்கு வந்ததும், அவர் குனிந்து அவர் வலது கையைப் பிடித்து, கன்னத்தின் ஒரு பக்கத்தில் முத்தமிடுவார், பின்னர் மற்றக் கையைப் பிடித்து, கன்னத்தின் மறுபக்கத்தில் முத்தமிடுவார். 36 இப்போது, அவர் முத்தமிடப் பட்ட போது, அவர் வரவேற்கப்பட்டார். அப்போது அவர் ஒரு முழு சகோதரர். அவர் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தார். அவர் உள்ளே சென்று ஐஸ் பெட்டியில் (icebox) தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம். அவர் வீட்டில் இருந்தார். அவர் முத்தமிடப்பட்டு வரவேற்கப்பட்டார். நல்லது, இந்த பரிசேயர்கள் மற்றும் அனைவரும் தங்கள் இடத்தைப் பிடித்தார்கள்... முதலாவது உங்களுக்குத் தெரியுமா, நாம் சுற்றிப் பார்க்கும்போது இயேசு மூலையில் அமர்ந்திருப் பதைக் காண்கிறோம். அது எப்படி நடந்திருக்க முடியும்? வாசலில் இருந்த வேலையாளுக்கு என்ன ஆயிற்று? கழுவப்படாத கால்களுடனும், எண்ணெய் பூசப்படாத தலையுடனும், முத்தமிடப்படாமலும் அவர் அங்கே அமர்ந்தி ருந்தார். அவர் வரவேற்கப்படவில்லை. ஏன்? பரிசேயன், சீமோன் என்னும் பரிசேயன், டாக்டர் ஜோன்ஸ் மற்றும் அவர்கள் அனைவருடனும் நகைச்சுவைகளைப் பகிர்வதில் மமுரமாக இருந்தான். அவனுக்கு நேரமில்லை. அவன் இயேசுவை நழுவவிட்டு உள்ளே வரவிட்டான். அந்த வேலையாள் அவரை நழுவவிட்டான். ஓ, நான் - நான் அந்த வேலையாளின் இடத்தைப் பிடித்திருக்க விரும்புகிறேன்: இயேசுவின் கால்களைக் கழுவவும், அவரைப் பூசவும், அவரை வரவேற்கவும் ஒரு வாய்ப்பு. அது அப்படித்தான் இருக்கிறது. அவன் அவரை அழைத்தான், ஆனால் அவரை வரவேற்கவில்லை. அதுதான் நாம் செய்கிறோம். நாம் அவரை அழைக்கிறோம், ஆனால் அவரை வரவேற்க மாட்டோம். 37 ஜனாதிபதி இந்த நகரத்திற்கு அல்லது எந்த நகரத்திற்கும் வந்தால், நீங்கள் தெருக்கள் முழுவதிலும் கொடிகளைத் தொங்கவிடுவீர்கள். நீங்கள் தெருக்களில் பூக்களைத் தூவுவீர்கள். அவர் ரயிலில் இருந்து இறங்கும் டிப்போவிற்கு (depot) இசைக்குழுவை அனுப்புவீர்கள். அவரை வரவேற்க நீங்கள் எல்லாவற்றையும் செய்வீர்கள். ஆனால் இயேசு உங்கள் நகரத்திற்கு, உங்கள் வீட்டிற்கு வரலாம், நீங்கள் அவருக்கு பரணில் (attic) ஒரு இடத்தையோ, பக்கத்தில் ஒரு சிறிய ஜெப அறையையோ கொடுப்பீர்கள், அல்லது அது அடித்தளத்தில் (basement) இருக்கலாம். உங்கள் விருந்தாளிகள் அங்கே இருந்தால், அவரோடு உங்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது. சிறிது நேரம் வரை காத்திருப்பீர்கள், ஒருவேளை அவர் வீட்டில் இருப்பார், நீங்கள் மெதுவாகப் பரணுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு, அவரிடம் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவரைப் பற்றி வெட்கப்பட்டுத் திரும்பக் கீழே வருவீர்கள். 38 சீமோன் அப்படித்தான் இருந்தான். அவன் அவரைப் பற்றி வெட்கப்பட்டான். "எப்படியும் நீர் வருவீரா, இயேசுவே?" "ஆம்." "நீர் இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொள்வீரா?" "ஆம், நான் இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொள்வேன். அவர்கள் எனக்குக் கொடுக்கும் எந்த இடத்தையும் நான் எடுத்துக் கொள்வேன்." நீண்ட காலத்திற்கு முன்பு நீங்கள் ஆலயத்திற்குச் சென்றதை நினைவில் கொள்ளுங்கள் (நிச்சயமாக, நீங்கள் இரட்சிக்கப் படுவதற்கு முன்பு) ஈஸ்டர் ஞாயிறன்று, நீங்கள் உங்கள் ஆடம்பரமான ஆடையை அணிந்தி ருந்தீர்கள். உங்கள் அழகான சிறிய ஈஸ்டர் தொப்பி உங்கள் தலையின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தது. நீங்கள் கீழே சென்று இருபது நிமிடப் பிரசங்கத்தைக் கஷ்டப்பட்டு கேட்டு விட்டு, திரும்பி வந்து அதைத் தொங்க விட்டு, "இந்த வருடத்திற்குப் போதுமான மதம் இது" என்று சொன்னீர்கள். அதற்காக இயேசு உங்களைக் கடிந்து கொள்ளவில்லை. அவர் அதை ஏற்றுக் கொண்டார். நீங்கள் அவருக்குக் கொடுத்ததை, நீங்கள் அவருக்கு என்ன கொடுக்க விரும்பு கிறீர்களோ, அந்தச் சிறிய நேரத்தை அவர் எடுத்துக் கொள்வார். அவர் ஒருபோதும் உங்களைக் கடிந்து கொள்ளவில்லை. 39 எப்போதாவது உங்கள் சபைக்கு வரும்படி நீங்கள் அவரைக் கேட்கிறீர்கள், அவர் ஒரு பழைய பாணியில் இறங்கி வருவார், நீங்கள் கட்டவிழ்ந்து அவரைத் தன் வழியில் செயல்பட விட வெட்கப்படுகிறீர்கள். நீங்கள் அவரை அவித்துப்போடுகிறீர்கள். நீங்கள் அவரை உங்கள் வீட்டிற்கு அழைக்கிறீர்கள், பின்னர் உங்கள் அயலகத்தார் முன்பாக அவரைப் பற்றி வெட்கப்படுகிறீர்கள், உபசரிக்கப் படாமல் அவரை அங்கே உட்கார வைக்கிறீர்கள். இயேசு ஆராதிக்கப்பட விரும் புகிறார். அவர் உபசரிக்கப்பட விரும்புகிறார். நீங்கள் எப்படி இயேசுவை உபசரிப்பீர்கள்? "வாரும், கர்த்தராகிய இயேசுவே. என் இருதயத்திற்குள் வாரும். நான் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே" என்று சொல்லுங்கள். அவரை உபசரியுங்கள். 40 யாராவது உங்கள் வீட்டிற்கு வந்து, நீங்கள் அவர்களை உபசரிக்கவில்லை என்றால், அவர்கள் பல முறை வரமாட்டார்கள். ஒருவேளை இன்றிரவு அதுதான் பிரச்சினையாக இருக்கலாம். ஒருவேளை நம் வீடுகளிலும் நம் சபைகளிலும் அதுதான் பிரச்சினையாக இருக்கலாம். நாம் இயேசுவை உபசரிக்கப் பயப்படுகிறோம் அல்லது வெட்கப்படுகிறோம். நீங்கள் "ஆமென்" என்று சொல்வதை யாராவது கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள். கைகளை உயர்த்தி அவருக்குத் துதி செலுத்தப் பயப்படுகிறீர்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது வேறு யாராவது அங்கே உட்கார்ந்தி ருப்பதால் நீங்கள் வெட்கப்படுகிறீர்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி எனக்கு என்ன கவலை? கர்த்தரை ஆராதியுங்கள். நீங்கள் அவரைக் கேட்டீர்கள். நீங்கள் அவரை அழைத்தீர்கள். பின்னர் அவர் வரும்போது அவரைத் தொழுதுகொள்ளுங்கள். அல்லேலூயா. இன்றிரவு நமக்குத் தேவை ஒரு பழைய பாணி இயேசு கிறிஸ்துவை உபசரிக்கும் இடம், அங்கே ஆண்களும் பெண்களும் தங்களை மறந்து இயேசுவை உபசரிக்க முடியும். ஆனால் அவர் எப்படியும் வருகிறார். நீங்கள் அவருக்கு ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் மட்டுமே தனி அறையிலோ, அடித்தளத்திலோ கொடுத்தால், அவர் அதை ஏற்றுக்கொள்வார். நீங்கள் அவருக்குக் கொடுக்கும் எதையும் அவர் ஏற்றுக் கொள்வார். அவர் அதை ஏற்றுக் கொள்வார். அவர் தேவன் என்பதை அது எனக்குக் காட்டுகிறது. ஆமென். 41 உங்களுக்குத் தெரியும், பெரிய மனிதர்கள் சிறியவர்களாக நடந்துகொள்வார்கள். சிறிய வேர்க்கடலை மூளை உள்ளவர்கள் பெரியவர்களாக நடிப்பார்கள். தான் ஏதோ பெரிய ஆள் என்று நினைக்கும் ஒருவனைப் பார்த்தால், அவனிடம் ஒன்றுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உலகின் மிகப் பெரிய மனிதர்கள் சிலருடன் இருந்திருக்கிறேன், நீங்கள் அவர்களை விட்டு விலகும்போது நீங்கள்தான் பெரிய மனிதர் என்று அவர்கள் உங்களை நினைக்க வைப்பார்கள். ஆனால் மாற்று உடை அல்லது ஏதோ ஒன்று வைத்திருக்கும் இந்த ஆட்கள் சிலர், பாஸ்டர் அது இது, அல்லது ஏதோ பெரிய சபை, ஏன், அவர்கள் ஏதோ பெரியவர்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என விரும்புவார்கள். அந்த நபர்தான் ஒன்றுமில்லாதவராக ஆகிறார். கவனியுங்கள், இயேசு இந்தப் பரிசேயனின் வீட்டிற்குள் நுழைந்திருந்தார். அவர் கொஞ்சம் சீக்கிரமாகவே புறப்பட்டார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒருபோதும் தாமதமாக வருவதில்லை. இயேசு எப்போதும் தன் சந்திப்புகளைக் கடைப் பிடிக்கிறார். அல்லேலூயா. 42 இயேசு இன்றிரவு இங்கே இருக்கிறார். நீங்கள் எப்படி - எங்கே இருந்தாலும் பரவாயில்லை, இயேசு தன் சந்திப்புகளைக் கடைப் பிடிக்கிறார். யோனாவுடன் ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில் அவர் தன் சந்திப்பைக் கடைப்பிடித்தார். தானியேலுடன் சிங்கங்களின் கெபியில் அவர் தன் சந்திப்பைக் கடைப்பிடித்தார். எபிரெய வாலிபர்களுடன் அக்கினிச் சூளையில் அவர் தன் சந்திப்பைக் கடைப்பிடித்தார். தேவனுக்கு ஸ்தோத்திரம். மரணப் படுக்கையில் என்னுடன் அவர் தன் சந்திப்பைக் கடைப்பிடித்தார். அவர் இன்றிரவு இங்கே இருக்கிறார். "எங்கே இரண்டு மூன்று பேர் என் நாமத்திலே கூடி இருக்கிறார்களோ அவர்கள் நடுவிலே நான் இருப்பேன்." இயேசு எப்போதும் தன் சந்திப்புகளைக் கடைப்பிடிக்கிறார். சரியான நேரத்தில் இங்கே வருவதற்காக அவர் ஒரு வேளை பரலோகத்தை விட்டுச் சிறிது சீக்கிரமாகவே புறப்படுகிறார். அவர் தன் சந்திப்புகளைக் கடைப்பிடிக்கிறார். 43 இங்கே அவர் இந்தப் பரிசேயனின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தேவன் வாசலில் நடந்து வந்தார், யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் மிகவும் வேலையாக இருந்தார்கள். நாமும் இன்று அப்படித்தான் இருக்கிறோம். மதமாற்றம் செய்வதில் நாம் மிகவும் மும்முரமாக இருக்கிறோம். இந்த நபர் சரியாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறாரா இல்லையா என்று பார்ப்பதில் நாம் மிகவும் மும்முரமாக இருக்கிறோம். அவருக்கு என்ன பதவி இருக்கிறது, அவரை வைத்துச் சபையில் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதில் நாம் மிகவும் மும்முரமாக இருக்கிறோம். கிறிஸ்து வரும் போது அவரை உபசரிக்காமல் விட்டுவிடும் அளவுக்கு மக்களுடனும் சபையின் காரியங் களுடனும் நாம் மிகவும் மும்முரமாக இருக்கிறோம். எல்லாம் அப்படி அப்படியாக நடக்கிறதா என்று பார்ப்பதில் நாம் மிகவும் மும்முரமாக இருக்கிறோம். இயேசுவை நம் இடத்திற்கு அழைத்த பிறகு அவரை உபசரிக்கத் தவறுகிறோம். பல நேரங்களில் உங்கள் வீட்டில் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் மிகவும் மும்முரமாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் மிகவும் அதிகம் - ஜெபிக்க நேரம் ஒதுக்க முடியாது, மிகவும் வேலை. அதுதான் அங்கே நடந்தது. 44 ஓ, நான் வாசலில் அந்த வேலையாளாக இருந்திருக்க விரும்புகிறேன். அவர் வருகிறார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், சகோதரனே, நான் தண்ணீர் பாத்திரத்தைக் காத்துக் கொண்டிருக்க வைத்திருப்பேன். ஆனால் அவர் கால்களைக் கழுவுவதற்கு முன்பாக நான், "ஆண்டவரே, உம் கால்களைக் கழுவிய பிறகு உம்மைத் தொழுதுகொள்ள நான் பாத்திரன் அல்ல. முதலில் உம்மைத் தொழுதுகொள்ள விடும்" என்று சொல்லியிருப்பேன். ஓ, நான் அதைச் செய்திருக்க விரும்புகிறேன். ஆனால் அங்கே அவர் அமர்ந்திருக்கிறார், வரவேற்கப்படவில்லை. அதை நினைத்துப் பாருங்கள். வரவேற்கப்படவில்லை, மூலையில் அமர்ந்திருக்கிறார், யாரும் அவரைப் பொருட் படுத்தவில்லை. பரிசேயனும் தன் டாக்டர் நண்பருடன் மிகவும் மும்முரமாக இருக்கிறான். இயேசு ஒரு மூலையில் அமர்ந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை. அவர் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார். உங்களுக்குத் தெரியும், தன்னை உபசரிக்க விரும்பாத பணக்காரர்களிடத்தில் அவர் ஒருபோதும் மிகவும் வரவேற்பைப் பெற்றதாக உணருவதில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கிறார்... தன்னைத் தாழ்த்திக் கொள்ள மனதாய் இருக்கும் மக்களுடன் அவர் அதிக ஈடுபாட்டுடன் உணருகிறார். உபசரிப்பு... அங்கே அவர் தலைகுனிந்து அமர்ந்தி ருக்கிறார், அவருடைய சீஷர்கள் வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அழைக்கப்படவில்லை, அவர்களால் உள்ளே வர முடியவில்லை. நீங்கள் உண்மையில் அந்த விருந்துகளில் ஒன்றில் இருக்க அழைக்கப் பட்டிருக்க வேண்டும். 45 ஆனால் சீஷர்களால் வர முடியவில்லை, இங்கே அவர் அங்கே மூலையில் அமர்ந்திருக்கிறார், யாரும் அவரைப் பொருட் படுத்தவில்லை. அவர் மிகவும் அசௌகரியமாக இருக்கிறார். இன்றிரவு அவர் வந்தால் நீங்கள் அப்படித் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அழுக்குக் கால்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர் அப்படித்தான் அசௌகரியமாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? நினைத்துப் பாருங்கள்: இயேசு அழுக்குக் கால்களுடன். அவர்கள் அவரை "ஜேசு" (Jésus) என்று அழைக்கிறார்கள். நான் "ஜேசு" என்று அழுக்குக் கால்களுடன் நினைக்கும்போது... அதைச் சொல்வது எனக்கு ஏதோ செய்கிறது. இயேசு, என் ஆண்டவர், ஒரு பக்திமானின் வீட்டில் அழுக்குக் கால்களுடன் வரவேற்கப்படாமல், வறண்ட கன்னங்களுடன், வரவேற்கப்படாமல், முத்தமிடப்படாமல் அமர்ந்திருக்கிறார்... ஆணிகளால் துளைக்கப் படப்போகும் அந்தக் கால்கள்தாம் அங்கே அழுக்காக, சாலையிலிருந்து வந்த சாணத் துடனும், அவர் கால்கள் முழுவதும் வியர்வை யுடனும் நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது, அந்தப் பெரிய நல்ல வீட்டில் தலைகுனிந்து வரவேற்கப்படாமல். யாரும் அவர் கால்களைக் கழுவவில்லை. ஓ, நான் - நான் அங்கே இருந்திருக்க விரும்புகிறேன். அங்கே இருந்திருக்க விரும்பு கிறேன், நீங்கள் விரும்பவில்லையா? நான் அங்கே நின்று கொண்டிருக்க விரும்புகிறேன். ஓ, நான் எப்படி அவரிடம் ஓடுவேன். 46 அந்த வேலையாள் எப்படி அவரை உள்ளே அனுமதித்தான்? எனக்குத் தெரிய வில்லை. கழுவப்படாத கால்கள், அழுக்கான கால்கள், இயேசு, என் ஆண்டவர் அழுக்குக் கால்களுடன்... யாரோ உதாசீனப் படுத்தியிருக் கிறார்கள்; யாரோ தங்கள் கடமையை உதாசீனப்படுத்தியிருக்கிறார்கள். அங்கே அவர் அமர்ந்திருக்கிறார், ஓ, வீட்டினுள் மிகவும் அசௌகரியமாக, யாரும் அவரைப் பொருட் படுத்தாமல், அழுக்குக் கால்களுடன், நாற்ற மடித்துக் கொண்டு, மக்கள் அவரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அங்கே வெளியே பாருங்கள், அங்கே கீழ்த்திசை நாட்டவர் அனைவரும் எப்படியும் வேடிக்கை பார்ப்பார்கள், அவர்கள் எம்பி நின்று பரிசேயனைப் பார்த்துக் கொண்டும், உணவின் வாசனையை நுகர்ந்து கொண்டும் இருந்தார்கள், ஒரு கோடு கிழிக்கப்பட்டிருந்தது, அவர்களால் அதற்கு மேல் வர முடியவில்லை. பரிசேயன் அங்கே தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான், இயேசு அழுக்குக் கால்களுடன் அமர்ந்திருந்தார். அதை நினைத்துப் பாருங்கள். வெளியே கூட்டத்தின் ஓரமாக ஒரு சிறிய பெண் முகத்திரை அணிந்து நடந்து வருவதை நான் காண்கிறேன். யாரோ ஒருவர் மற்றொருவரை இடித்து, "யார் வந்திருக்கிறது என்று பார்" என்று சொல்வதை நான் கேட்கிறேன். 47 அவள் ஒரு பயங்கரமான பாவி என்று வேதாகமம் சொல்கிறது. நாம் அதைப்பற்றி விரிவாகப் பேச வேண்டியதில்லை. அவள் ஒரு விபச்சாரி, ஒரு ஒழுக்கங்கெட்ட பெண். கேளுங்கள். சில நேரங்களில் நீங்கள் அந்த மக்களைப் பின்னுக்குத் தள்ளுகிறீர்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், யாரோ ஒருவர் அவளை அந்த வாழ்க்கைக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார். ஒரு ஒழுக்கங்கெட்ட பெண் இருக்க முடியுமானால், அதற்கு முன்னால் ஒரு ஒழுக்கங்கெட்ட ஆண் இருக்க வேண்டும். அது சரி. ஒருவேளை ஏதோ ஒரு பையன் அவளைக் காதலித்து, அவளை மயக்கி, அவளுக்கு வாக்குறுதிகள் கொடுத்து, அவள் வாழ்க்கையைச் சீரழித்து, இது போன்றவற்றுக்கு அவளை அறிமுகப்படுத்தி, பின்னர் அவளை ஒரு ஓரமாகத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் தேடி ஓடியிருக்கலாம். அது அவளைத் தொடங்கியிருக்கலாம். அவள் ஏதோ ஒரு தாயின் மகள். நான் நினைக்கிறேன், "ஓ, நாம் மிகவும் நீதிமான்கள், உங்களுக்குத் தெரியும்." ஓ, ஆச்சரியம். அதுபோன்ற மக்களிடம் நாம் இறங்கிப் போய் பேச முடியாது. அவர்கள் சிறந்த வீடுகளில் வசிக்கவில்லை என்றால், அவர்களிடம் சிறந்த சமூகங்கள் இல்லை யென்றால், ஏன், நாம் அவர்களைச் சபைக்குள் கொண்டுவர விரும்புவதில்லை. 48 சகோதரனே, "வேலிகளிலும் வழிகளிலும் போய் அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்" என்று இயேசு சொன்னார், அவர்கள் யாராக இருந்தாலும் சரி. இந்த வணங்காக்கழுத்துள்ள சோ-சோ (so-so) ஆட்களில் சிலரை விடச் சில நேரங்களில் அவர்கள்தான் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்கிறவர்கள். அவள் வருகிறாள். அவள் சுற்றிலும் பார்க்கிறாள், யாரோ ஒருவர், "பார் - பரிசேயனின் விருந்துக்கு என்ன வந்திருக்கிறது என்று பார். ஓ, அவள் யார் என்று பார். நமக்குத் தெரியும்; தள்ளி நில்" என்று சொல்கிறார். அவள் கடந்து செல்கிறாள். தான் வெறுக்கப்படுவது அவளுக்குத் தெரியும். யாரும் இல்லை... சுயநீதிமான்கள், "இல்லை, ஐயா, அவளை... பின்னால் நில்லுங்கள்; அவளுக்கு வழிவிடுங்கள்." 49 ஆனால் அவள் மேலே செல்வதை நான் காண்கிறேன், அவள் அங்கே பார்க்கிறாள், அவள் அவரைக் காண்கிறாள். "ஓ," அவள் சொன்னாள், "அது இருக்க முடியாது. நிச்சயமாக, அது - அது அவராகத்தான் இருக்க வேண்டும். நல்லது, அது அவர்தான். அவருக்கு இருக்கிறது... அவர் வரவேற்கப்படவில்லை. அவருக்கு அழுக்கான கால்கள் இருக்கின்றன. அவர் பூசப்படவில்லை, யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை." அவள் சொன்னாள், "நிச்சயமாக, யாராவது ஏதாவது செய்ய வேண்டும்." அவள் தன் சிறிய சால்வையை மேலே இழுத்துப் போர்த்திக்கொள்வதை நான் காண்கிறேன், அவள் தன்னால் முடிந்த அளவு வேகமாகத் தெருவில் செல்கிறாள். அவள் அந்தச் சிறிய பழைய கிரீச்சிடும் படிகளில் ஏறித் தன் சிறிய அறைக்குச் செல்கிறாள், அவள் ஒரு சிறிய பெட்டிக்குள் சென்று, அதில் கொஞ்சம் பணத்துடன் இருந்த தன் சிறிய காலுறையை (sock) அல்லது ஏதோ ஒன்றை வெளியே எடுக்கிறாள். அவள் சொன்னாள் - அவள் சொன்னாள், "இல்லை, இல்லை, இல்லை நான் - என்னால் இதைச் செய்ய முடியாது. என்னால் அதைச் செய்ய முடியாது." அவள் அழத் தொடங்கினாள்; அவள் சொன்னாள், "ஓ, அந்தக் கண்கள், அவர் என்னை எப்படிப் பார்த்தார்." 50 யாரும் இயேசுவைப் பார்த்துவிட்டு அப்படியே இருக்க முடியாது. அவள் சொன்னாள், "நான் எனக்கே உரியவளாக இருக்க வேண்டும். பார். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று எனக்குத் தெரியும், இந்தப் பணம் எனக்கு எங்கிருந்து கிடைத்தது என்று அவருக்குத் தெரியும். எனக்கு அது எப்படிக் கிடைத்தது என்று அவருக்குத் தெரியும். என்னால் இதை அவரிடம் கொண்டு செல்ல முடியாது. என்னால் அதைச் செய்யவே முடியாது." அவள் அதைத் திரும்ப வைக்கிறாள்; அவள் அழுது கொண்டிருக்கிறாள், "ஓ, அதை நினைத்துப் பார். ஓ அவர்... யாரும் அவரை விரும்பவில்லை. ஓ, நான் அதைப் பற்றி ஏதாவது செய்தே ஆக வேண்டும்" என்று சொன்னாள். அவள் மீண்டும் தன் சிறிய காலுறையை, தன் சிறிய பெட்டியை வெளியே எடுக்கிறாள், அவள் அதைப் பார்க்கிறாள், அவள் சொன்னாள், "ஓ, நிச்சயமாக, ஆனால் இது - என்னிடம் இருப்பது இவ்வளவுதான். என்னால் செய்ய முடிந்தது இவ்வளவுதான். நிச்சயமாக அவர் புரிந்து கொள்வார்." அவள் தன் சிறிய பணத்தைத் தன் மார்பில் திணித்துக்கொண்டு, தன் சால்வையைத் தன்மேல் போர்த்திக்கொண்டு, தெருவில் இறங்கிப் போவதை நான் காண்கிறேன்; அங்கே வாசனைத் திரவியங்கள் மற்றும் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கும் ஒரு யூதக் கடைக்கு அவள் செல்கிறாள். அவள் உள்ளே செல்கிறாள், அங்கே ஒரு வயதான ஆள் உட்கார்ந்து கொண்டு, சிடுசிடுப்புடன் தன் பணத்தை எண்ணிக்கொண்டு, "ஆச்சரியம், இது ஒரு மோசமான நாள். வாடகைக்குக் கூடப் பணம் தேறவில்லை" என்கிறான். ஓ, என்னே. உங்களுக்குத் தெரியும் முதல் விஷயம், இந்த விபச்சாரி உள்ளே நடக்கிறாள். 51 "நல்லது, என்ன வந்திருக்கிறது என்று பார்." ஒரு கனிவான விற்பனையாளராகவோ, அல்லது கனவானாகவோ இருக்க வேண்டியவன் போல அவன் போய், "நான் உனக்கு என்ன செய்ய முடியும்?" என்று கேட்கவில்லை. அவன், "நல்லது, உனக்கு என்ன வேண்டும்?" என்றான். அவள் சொன்னாள், "ஐயா, உங்கள் வீட்டில் உள்ளதிலேயே சிறந்த வெள்ளைக்கல் பாத்திரம் (alabaster box) எனக்கு வேண்டும், ஏதோ ஒன்று அல்ல, எனக்குச் சிறந்தது வேண்டும்." பாருங்கள், அவள் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும், ஒவ்வொரு காசையும் கொடுத்துக் கொண்டிருந்தாள்; அவள் தன்னால் முடிந்த சிறந்ததைக் கொடுக்க வேண்டியிருந்தது. நீங்களும் நானும், நாம் ஏதோ பக்கவாட்டில் உள்ளதைக் கொடுக்கிறோம். நீங்கள் உங்கள் சிறந்ததைக் கொடுக்கிறீர்களா? நீங்கள் உங்கள் சிறந்ததைக் கொடுக்கவில்லை என்றால், அவளைப் பரிகாசம் செய்யாதீர்கள். அவள் தன்னிடம் இருந்த தைலத்தில் தன் சிறந்ததைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள், "உங்களிடம் உள்ளதிலேயே சிறந்த வெள்ளைக்கல் பாத்திரத் தைலம் எனக்கு வேண்டும்" என்றாள். "நல்லது," அவன், "உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்போம்?" என்றான். நிச்சயமாக, பணத்தின் சத்தம் அவன் எண்ணத்தை மாற்றியது. அவன் இருநூற்று எண்பது ரோமத் தெனாரியன்களை எண்ணினான், அது சரியாக இருந்தது, அவன் அவளுக்கு வெள்ளைக்கல் பாத்திரத்தைக் கொடுக்கிறான். அவள் அழுது கொண்டிருப்பதை அவன் கவனித்தான். அவள் கண்கள் கலங்கியிருந்தன. அவள் அதைத் தன் மார்பில் திணித்துக் கொண்டு, கதவு வழியாக வெளியேறுகிறாள். 52 யாரோ இடிக்கிறார்கள், "பார், அங்கே போகிறாள், பார், அங்கே போகிறாள்." இன்றைக்கு அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். இடித்து, இடித்து, "அங்கே பார்; அது ஒரு ஹோலி ரோலர் (holy-roller). பார், அங்கே போகிறாள். அவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? அவர்கள் அந்தக் கூட்டத்தில் ஒருத்தர். அது அந்தக் கும்பலில் ஒன்று." ஓ, நான் அவர்களில் ஒருவனாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. ஆம், ஐயா. "அங்கே போகிறார்கள். அவள் இப்போது எங்கே போகிறாள் என்று பார், அவள் அழுது கொண்டிருக்கிறாள். ஓ, அவள் அந்த மதவெறியர்களில் ஒருத்தி. அவள் எங்கே போகிறாள் என்று பார், அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேராகப் போகிறாள்." அவள் அங்கே மேலே போகிறாள். அவள் தாமதமாகிவிட்டாள். அவள் சீக்கிரம் செல்ல வேண்டும். ஆனால் சகோதரனே, ஒருபோதும் வராமல் இருப்பதை விடத் தாமதமாக வருவது நல்லது. நீங்கள் நீண்ட காலம் காத்திருக்கலாம், ஐயா; உங்களுக்கு அறுபது அல்லது எழுபது வயதாகலாம், ஆனால் அங்கே வராமலே போவதை விடத் தாமதமாக வருவது - தாமதமாக வருவது நல்லது. வாருங்கள். 53 நீங்கள் சொன்னீர்கள், "ஓ, நல்லது, நான் எப்போதாவது பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன், சகோதரர் பிரான்ஹாம்." இப்பொழுதே. நீங்கள் சொல்கிறீர்கள், "நல்லது, எனக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது; என்னால் அதிக சேவை செய்ய முடியாது." எப்படியாவது பெற்றுக்கொள்ளுங்கள், ஒருபோதும் வராமல் இருப்பதை விடத் தாமதமாக வருவது நல்லது. அவள் அங்கே போனாள். அவள் அங்கே சென்றபோது, விருந்து முழுவதும்... அவள் சரியான இடத்தில் இருப்பதை அறிந்தாள், கண்ணாடிகள் ஒன்றோடு ஒன்று மோதின, பெரிய ஆரவாரங்கள், திராட்சரசங்கள் ஊற்றப்படும் நேரங்கள், மற்றும் எல்லாம். அவள் சரியான இடத்தில் இருப்பதை அறிந்தாள். இப்போது அவள் கால்விரல்களால் நடந்து, பின்னால் பார்க்கிறாள், அங்கே அவர் அமர்ந்திருப்பதை அவள் காண்கிறாள். அவள் சொன்னாள், "என்னால் முடியாது. அது - அது இருக்க வேண்டும்... அவர்கள் என்னை உள்ளே பிடித்தால், என்ன செய்வார்கள்? நான் உள்ளே சென்றால் இடமில் லாதவளாக இருப்பேன். நான் அதுபோன்ற ஒரு கூட்டத்திற்குள் சென்றால், நான் இடமில் லாதவளாக இருப்பேன், என்னைப் போன்ற ஒரு நபர். நல்லது, அவர்கள் - அவர்கள் என்னைத் தூக்கி எறிவார்கள். நான் - என்னால் போக முடியாது... ஒருவேளை நான் அதைச் செய்வதை அவர் விரும்பமாட்டார். நான் கனவு கண்டு கொண்டிருக்க வேண்டும். ஏதோ தவறு இருக்க வேண்டும்," கண்ணீர் அவள் கன்னங்களில் ஓடியது. அவள் சொன்னாள், "ஆனால் ஒரு முறை அவர் பிரசங்கிப்பதைக் கேட்டேன், அவர் இதைக் குறித்துப் பிரசங்கித்தார், 'வருத்தப் பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். எவன் விரும்புகிறானோ அவன் வரட்டும்.' நிச்சயமாக, அவர் என்னைக் குறித்துத்தான் சொன்னார்." 54 பிறகு அவள் தலைகுனிந்து, கூட்டத்தின் வழியாக முண்டியடித்துக்கொண்டு செல்வதை நான் காண்கிறேன். அவள் அவரிடம் செல்ல முயற்சிக்கிறாள். அப்படித்தான் செய்ய வேண்டும். நீங்கள் அவரிடம் சேரும் வரை கூட்டத்தின் வழியாக முண்டியடித்துக்கொண்டு செல்லுங்கள், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, "அற்புதங்களின் நாட்கள் முடிந்து விட்டன. தெய்வீக சுகம் என்று ஒன்று இல்லை. உள்ளப்பூர்வமான இரட்சிப்பு என்று ஒன்று இல்லை." முண்டியடித்துக்கொண்டு செல்லு ங்கள். கூட்டத்தின் ஊடே செல்லுங்கள். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்; இயேசுவிடம் செல்லுங்கள். அவளிடம் இருந்த ஒரே இரட்சிப்பின் ஊற்று அதுதான். உங்களிடம் உள்ள ஒரே ஊற்று, யாரிடமும் உள்ள ஒரே ஊற்று, இயேசுவிடம் செல்வதுதான். நீங்கள் ஒவ்வொரு சபைப் பிரிவின் வழியாகவும் மற்ற எல்லாவற்றின் வழியாகவும் முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தாலும், அவரிடம் செல்லுங்கள், சீக்கிரமாக. 55 ஓ, ஆச்சரியம். அவள் அவருக்குப் பக்கத்தில் போனாள், அவள்... அங்கே இயேசு அமர்ந்திருந்தார். அவள் அவரைப் பிடித்தாள்... என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் அவர் முன்பாகக் கீழே விழுந்தாள்; அவள் அழுது கொண்டிருந்தாள். கண்ணீர் அவள் கன்னங்களில் உருண்டு அவள் தாடையிலிருந்து விழுந்தது. உங்களுக்குத் தெரியும் முதல் விஷயம், அவள் அவர் கால்களைத் தூக்கி, அவர் கால்களைத் தேய்க்கத் தொடங்கினாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவள் ஊற்றின் அருகில் நின்று கொண்டிருந்தாள். தன் ஆத்துமா சுத்திகரிக்கப் படக்கூடிய ஒரே சுத்திகரிக்கும் இடத்தின் அருகில் அவள் நின்று கொண்டிருந்தாள். பூமியில் எப்போதோ தோன்றிய ஒரே ஜீவ ஊற்றின் அருகில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவள் தன் நிலையில் அங்கே இருந்தாள். அவள் அவர் கால்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். உங்களுக்குத் தெரியும் முதல் விஷயம், அவள் - அவள் தன்னையே மறந்தாள். தான் என்ன செய்ய - செய்து கொண்டிருந்தாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் அழுது கொண்டிருந்தாள், கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது, அவள் அவர் கால்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள், அவள் இயேசுவின் அழுக்குக் கால்களைத் தன் கண்ணீரால் கழுவுவதைக் கண்டாள். என்ன ஒரு தண்ணீர், ஜேசுவின் அழுக்குக் கால்களைத் தன் கண்ணீரால் கழுவுகிறாள். இதுவரை வந்ததிலேயே மிகப் பெரிய தண்ணீர், மனம் வருந்திய ஒரு பாவியின் கண்ணீர், கர்த்தராகிய இயேசுவின் கால்களைக் கழுவுகிறது. 56 அவள் அழுது, அவர் கால்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது, அவள் - அவள் தன்னையே மறந்திருந்தாள். என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. எப்படி யாவது இரட்சிக்கப்படுவதற்குப் போதுமான நேரம் நம்மை மறந்து இருக்க தேவன் நமக்கு உதவுவாராக. நிச்சயமாக அவள் விருந்தின் எல்லா விதிகளையும் மீறினாள். இப்போது விருந்தில் என்ன நடந்து கொண்டிருந்தது? விருந்து என்ன செய்து கொண்டிருந்தது, அவள் எத்தனை விதிகளை மீறினாள் என்பதைப் பற்றி நமக்கு என்ன கவலை? அவள் இயேசுவுக்கு முன்பாக வந்து இரட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். இன்றிரவு நாம் செய்ய வேண்டியதும் அதுதான், இயேசுவுக்கு முன்பாக வந்து இரட்சிக்கப்பட வேண்டும். நீங்கள் விதிகளை, அல்லது நடை முறைகளை மீறுகிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அதற்கும் இதற்கும் எந்த சம்பந் தமும் இல்லை. விஷயம் என்னவென்றால், இயேசுவுக்கு முன்பாக வருவதுதான். அவள் தன் கண்ணீரால் அவர் கால்களைக் கழுவிக் கொண்டிருந்தாள், அவள்... உங்களுக்குத் தெரியும் முதல் விஷயம், அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டாள், அவள் எழுந்திருக்கத் தொடங்கினாள், அவள் தலையில் பின்னப் பட்டிருந்த அவளுடைய கூந்தல் முழுவதும் கீழே விழுந்தது. அவள் தன் - தன் தலைமுடியால் அவர் கால்களைத் துடைக்கத் தொடங்கினாள். நமது கிறிஸ்தவச் சகோதரிகள் பலருக்கு அதைச் செய்வது கடினமான நேரமாக இருக்கும்: அதைச் செய்ய அவர்கள் தலைகீழாக நிற்க வேண்டும்; அவர் கால்களைத் துடைக்க அவர்களிடம் போதுமான முடி இல்லை. அது சரி. நான் அதை ஒரு ஜோக்காகச் சொல்ல வில்லை. ஆனால் நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். "ஸ்திரீக்குக் கூந்தல் அவளுக்கு மகிமையாயிருக்கிறது" என்று வேதாகமம் சொல்லுகிறது. ஆம், ஐயா. 57 அது அங்கே எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று பாருங்கள். அவளுடைய மனந்திரும்புதலின் கண்ணீர், அவள் அவர் கால்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த ஒரே கண்ணியமான விஷயம் அவளுடைய கூந்தல். அவளுடைய மகிமை கீழே விழுந்தது. அல்லேலூயா. அவளுடைய மகிமை, அவள் தன் மகிமையால் இயேசுவின் கால்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அல்லேலூயா. தேவனே, நான் என்னவாக இருக்கிறேனோ எல்லாவற்றையும் கொண்டு அவர் கால்களைத் துடைக்கவும், அவர் கால்களைக் கழுவவும், ஆவியிலே அவரைத் தொழுதுகொள்ளவும், என் இருதயத்தில் அவரை வரவேற்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்யவும் என்னை அனுமதியும், "அன்பான ஆண்டவராகிய இயேசுவே, இதோ என்னை எடுத்துக்கொள்ளும், உம்முடையவராக்கிக்கொள்ளும்" என்று சொல்லுகிறேன். அவள் தன் தலைமுடியால் அவர் கால்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். உங்களுக்குத் தெரியும் முதல் விஷயம், அவள் தன்னை [சகோதரர் பிரான்ஹாம் முத்தமிடும் சத்தங்களை எழுப்புகிறார்] அவர் கால்களை முத்தமிடுவதைக் கண்டாள். நான் சொல்கிறேன், பரிசேயன் ஜோன்ஸ் வெளுத்துப் போனான், பின்னர் சிவந்தான். பிசாசு உண்மையில் அவனைப் பிடித்துக்கொண்டான். "ஹேம்! ஹேம்! ஹேம்!" என்று அவன் சொல்வதை என்னால் காண முடிகிறது. ஓ, அவன் என்ன ஒரு ஆத்திரத்தில் இருந்தான். அவனது விருந்தைக் கலைத்து, அது அவனது சபையைச் சீரழிக்கும். 58 நீங்கள் ஒருபோதும்... ஏன், அவன் சொன்னான், "இங்கே பார். அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், தன்னைச் சுற்றியி ருப்பது எப்பேர்ப்பட்ட ஸ்திரீ என்று அவருக்குத் தெரிந்திருக்கும்." கேளுங்கள். "ஏன், அது அவனது நற்பெயரைக் கெடுத்துவிடும்." இல்லை, அவன் தவறாக நினைக்கிறான். பாவிகள் இருக்குமிடத்தில்தான் இயேசுவின் நற்பெயர் உண்டாகிறது, இப்படியாக அல்ல... பாவிகள் அவரிடம் வருவது ஒருபோதும் அவர் நற்பெயரைக் கெடுப்பதில்லை; அது அவர் நற்பெயரை உருவாக்குகிறது. இயேசுவுக்கு முன்பாகப் பாவிகள் இருப்பது நமக்கு அதிகம் தேவை, அது அவருக்கு ஒரு நற்பெயரை உருவாக்குகிறது, ஏனென்றால் அவர்கள் மனந்திரும்பத் தயாராக இருக்கிறார்கள். அங்கே அவர் கால்களைத் துடைத்து, முத்த மிட்டு, அவள், ஓ, தன்னையே மறந்திருந்தாள். அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள். அவள்... தான் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அதைத்தான் நாம் செய்ய விரும்புகிறோம். உங்களை இழக்கும் வரை கிறிஸ்துவுக்கு முன்பாக வாருங்கள். பழைய பாடல் சொன்னது: "என்னை இழந்து, ஆண்டவரே, உம்மில் என்னைக் கண்டுகொள்ள அனுமதியும்." என்னிடம் உள்ள எல்லா அந்தஸ்தையும் நான் இழக்கட்டும். நான் உம்மில் என்னைக் கண்டுகொள்ளும்படி எல்லாவற்றையும் இழக்கட்டும். 59 பிறகு உங்களுக்குத் தெரியும் முதல் விஷயம், பரிசேயன் பேசத் தொடங்கினான், அவள் எழுந்தாள். இயேசு திரும்பிப் பார்த்து, "சீமோனே, நான் உனக்கு - உன்னைக் குறித்துச் சொல்ல வேண்டிய ஒரு காரியம் உண்டு" என்றார். "உன் அழைப்பின் பேரில் நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவவில்லை" என்றார். அவர், "ஆனால் இந்த ஸ்திரீயும்... கழுவினாள்" என்றார். மேலும், "நீ எனக்கு எந்த முத்தமும் கொடுக்கவில்லை. நீ என்னை வரவேற்கவில்லை. என் தலையில் பூச நீ எனக்கு எந்தத் தைலமும் கொடுக்கவில்லை" என்றார். ஆனால், "இந்த ஸ்திரீ உள்ளே வந்தது முதல் என் பாதங்களை முத்தமிடுவதை நிறுத்தவே இல்லை" என்றார். 60 அந்த வீரச் செயலுக்காக அவர் அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பினார்; அவர், "ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன், இவள் செய்த பாவங்கள் அநேகம், அவையெல்லாம் மன்னிக்கப்பட்டது" என்றார். ஓ, "இவள் செய்த பாவங்கள் அநேகம், அவையெல்லாம் மன்னிக்கப்பட்டது" என்ற வார்த்தைகளை நான் கேட்கும் வரை, உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி நாம் என்ன கவலைப்படுகிறோம். ஓ, தேவனே, ஒருநாள் வாழ்க்கை எல்லாம் முடியும் போது, நான் - நான் - நான் அவர் காலடியில் தவழ்ந்து செல்ல விரும்புகிறேன். நான் - நான் - நான் அந்தப் பாதங்களைத் தட்டிகொடுக்க விரும்புகிறேன், இன்னும் சிறிது நேரத்தில் ஆணியடிக்கப்பட்டு தழும்பாகப் போகிற அந்தப் பாதங்கள், அங்கே அழுக்காக இருந்தன, அவள் மனந்திரும்புதலின் கண்ணீரால் அவற்றைக் கழுவினாள், தன் கூந்தலின் மகிமையால் அவற்றைத் துடைத்தாள், தன் உதடுகளால் அவற்றை முத்தமிட்டாள். எண்ணெயின் பிசுபிசுப்பு - அந்தத் தைலத்தின் பிசுபிசுப்பு இன்னும் அவள் உதடுகளில் இருக்கிறது, அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவள் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். 61 இதற்கெல்லாம், அவளிடம் இருந்த எல்லாவற்றையும், அவள் தன் மகிமை முழுவதையும் கீழே வைத்தாள், தன் பணம் முழுவதையும் கீழே வைத்தாள், தன்னிடம் இருந்த எல்லாவற்றையும், தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் மேல் செலவிட்டிருந்தாள். அங்கே அவள் அவர் கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள், அவள் உதடுகள் அனைத்தும் தைலத்தால் பிசுபிசுப்பாக இருந்தன, கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது, அவள் கூந்தல் கீழே தொங்கியது, அவள் வெள்ளைக்கல் பாத்திரத்தை உடைத்து அவர் கால்கள் முழுவதும் ஊற்றியபோது, அது முழுவதுமாக அவர் கால்களில் பட்டதால் அந்தப் பிசுபிசுப்பு மற்றும் தைலத்தால் ஈரமாக இருந்தது. அவள் எதையும் பின்னால் வைத்திருக்கவில்லை; அவள் அதை முழுவதும் அவர் கால்களில் ஊற்றினாள். அங்கே அவர் இருந்தார் - அவள் அங்கே அமர்ந்திருந்தாள். அவர், "இவள் செய்த பாவங்கள் அநேகம், அவையெல்லாம் மன்னிக்கப்பட்டது" என்றார். இன்றிரவு நாம் பெறவும் - நமது சுய பாணி விறைப்பான எண்ணங்களிலிருந்து நம்மை இழந்து இயேசு கிறிஸ்துவைக் கண்டு கொள்ளவும் அவரை நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவாராக. ஓ, நாம் தலைகளைத் தாழ்த்தியிருக்கும் வேளையில் இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொரு இழந்துபோன பாவிக்கும் அவர் அதை அருளுவாராக. 62 எங்கள் பரலோக பிதாவே, எங்கள் ஆண்டவராகிய இயேசு வருவதையும், அழைக்கப்பட்ட வீட்டில் அவர் உபசரிக்கப் படாமல் இருப்பதையும் நாங்கள் நினைக்கும் போது... ஓ தேவனே, இங்கே சிகாகோவில் உள்ள மக்கள், இப்போது இங்குள்ள மக்கள், என்னுடனும் கூட உம்மில் எங்களை இழந்து, ஆண்டவரே, எங்கள் முழு இருதயத்தோடும், எங்கள் முழு பலத்தோடும், எங்கள் முழு மனதோடும் உம்மை உபசரிக்கக்கடவோம். நாங்கள் ஆவியோடும் உண்மையோடும் உம்மைத் தொழுதுகொள்ளவும், பரிசுத்தத்தின் அலங்காரத்துடனே ஒவ்வொரு நாளும் நாங்கள் வாழவும் செய்வீராக. உலகம் அதைப் பற்றி என்ன சொல்லும் என்பதைப் கவனிக்காமல், ஆண்டவரே, நீர் அதைப் பற்றி என்ன சொல்கிறீர் என்பதைக் கவனிக்கச் செய்யும். அருளும். இன்றிரவு இங்குள்ள இம்மக்களை ஆசீர்வதியும். யாராவது ஒருவர் இங்கே இருந்தால், பிதாவே, உம்மைத் தங்கள் இரட்சகராக அறியாதவர், அவர்கள் மேலே பார்த்து, "ஆண்டவரே, பல முறை நீர் என்னிடத்தில் வரும்படி நான் கேட்டிருக்கிறேன், ஆனால் என் முதலாளியின் முன்னிலையில் உம்மைப் பற்றி நான் சற்று வெட்கப் பட்டிருக்கிறேன். என் பக்கத்து வீட்டுக்காரர் முன்னிலையில் உம்மைப் பற்றிச் சற்று வெட்கப்பட்டிருக்கிறேன். நான் - நான் - நான் உம்மை அடித்தளத்திலோ, அல்லது எங்கேயோ, நான் தனியாக இருக்கும்போது எங்கேயோ தள்ளி வைத்திருக்கிறேன். நான் - நான் உம்மைப் பற்றி வெட்கப்பட்டிருக்கிறேன், ஆனால் தேவனே நீர் அதற்காக என்னை மன்னித்தால், இன்றிரவு முதல் இனி ஒருபோதும் நான் உம்மைப் பற்றி வெட்கப்பட மாட்டேன். நான் எல்லா இடங்களிலும் உம்மைப் பற்றிச் சாட்சி சொல்வேன். என் விருந்தினர் வரும்போது, நான் அவர்கள் அனைவரையும் ஜெபத்தில் நடத்துவேன். உம்மைத் தொழுதுகொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன், ஆண்டவரே" என்று சொல்லட்டும். தேவனே, இன்றிரவு தெய்வீகப் பிரசன்னத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் மனப்பான்மையும் அதுவாக இருக்க அருளும். 63 நாம் தலைகளைத் தாழ்த்தியிருக்கும் வேளையில். இந்தக் கட்டிடத்தில் எங்கேயாவது யாராவது ஒருவர், "ஆண்டவரே, நான்... நான் பிரசங்கியாருக்காக அல்ல, உமக்காக, தேவனே என் கையை உயர்த்துகிறேன். உம்மை உபசரிப்பதில் நான் சோம்பலாக இருந்தி ருக்கிறேன். நான் கொஞ்சம் பின்வாங்கி யிருந்தேன். நான் வெட்கப்பட்டேன். பரிசேயர் களின் அந்த விறைப்பான கட்சியில் நான் சேர்ந்திருந்தேன், உண்மையிலேயே உம்மைப் பற்றி வெட்கப்பட்டேன். ஆனால் நீர் என்னை மன்னித்தால், ஆண்டவரே, இன்றிரவு முதல் இனி ஒருபோதும் நான் உம்மைப் பற்றி வெட்கப்பட மாட்டேன்" என்று சொல்வார்களா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நீங்கள் உங்கள் கையை உயர்த்தி, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்வீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை, உங்களை. அது சரி. மேலே பால்கனியில், மேலே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; அது நல்லது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் கையை உயர்த்துங்கள். அது சரி. "தேவனே, என்மேல் இரக்கமாயிரும்." இங்கே வலதுபுறம் முழுவதும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் கைகள் எல்லாம் மேலே கீழே போவதை நான் பார்க்கிறேன். இப்போது மைய வரிசை முழுவதும் கீழே, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. என் இடதுபுறம் உள்ள இந்த மற்ற வரிசைகளில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. 64 "இயேசுவே, இதன் மூலம் நான் என் கையை உயர்த்துகிறேன்." சொல்லுங்கள், "நான் உம்மை உபசரித்த விதத்திற்காக நீர் என்னை மன்னித்தால் இனி ஒருபோதும் உம்மைப் பற்றி வெட்கப்பட மாட்டேன். நீர் என் இருதயத்திற்கு வந்திருக்கிறீர்; செய்ய வேண்டிய நிறையக் காரியங்களை நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர். நீர் என்னை ஆசீர்வதிக்கிறீர், அதனால் நான் சத்தமிட விரும்புகிறேன், ஆனால் அதைச் செய்ய நான் வெட்கப்பட்டேன். இனி ஒருபோதும் நான் அதைச் செய்ய மாட்டேன், தேவனே. நீர் என்னிடம் பேசும்போது நான் உமக்குப் பதிலளிப்பேன். நான் உம்மை நேசிப்பேன். உம்முடைய நன்மையை எங்கும் சாட்சி சொல்வேன்." இப்போது, வேறு யாராவது, தங்கள் கையை உயர்த்தாதவர்கள், நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கத் தொடங்குவதற்கு முன்பாக, உங்கள் கையை உயர்த்த விரும்புகிறீர்களா? சரி. அது சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அங்கே மூலையில், நான் உங்களைப் பார்க்கிறேன். அந்தப் பக்கம்... அது நல்லது. நீங்கள் அப்படிச் செய்வதைப் பார்க்க நான் விரும்புகிறேன். அங்கே பின்னால், நான் உங்களைப் பார்க்கிறேன். தேவனும் உங்களைப் பார்க்கிறார். இங்கே கீழே நான் உங்களைப் பார்க்கிறேன், சகோதரரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. ஆம், நீங்கள், சகோதரரே, நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். தேவன் நிச்சயமாகப் பார்க்கிறார். ஆம், சகோதரி, ஆம், சகோதரரே. அது சரி. 65 அங்கே பின்னால் நான் உங்களைப் பார்க்கிறேன், சகோதரி. அங்கே பின்னால் பார்க்கிறேன், சகோதரரே. அது நல்லது. அங்கே பின்னால், சகோதரி, உங்கள் கை உயர்த்தி இருப்பதை நான் பார்க்கிறேன். இங்கே முன்னால் கீழே, ஆம், சகோதரரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. அது சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அறுபது, எழுபத்தைந்து கைகள் ஏற்கனவே உயர்ந்தி ருக்கின்றன. வேறு யாராவது, "தேவனே நான் என் கையை உயர்த்துகிறேன்" என்று சொல்வீர்களா? மக்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்கிறார்கள், ஆனால் தேவனே, "நீர் என்னை உமக்கு ஒரு உண்மையான, உண்மையான ஆராதனைக் காரனாக, நீர் பிரியப்படும் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் செய்ய வேண்டி யிருந்தால்..." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி, நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். அங்கே நீங்கள், நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். அங்கே நீங்கள், கட்டம் போட்ட உடையுடன், நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். அங்கே பின்னால், சகோதரரே, உங்களுடையது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே, நீங்கள், நீங்கள் அங்கே பின்னால், ஆம். ஓ, ஆச்சரியம், கைகள் தொடர்ந்து மேலே போய்க்கொண்டே இருக்கின்றன. 66 "இன்றிரவு முதல், தேவனே நான் - நீர் இங்கே இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும்; நீர் சந்திப்பீர் என்று எனக்குத் தெரியும்... ஆனால் நான் உம்மைத் தள்ளிப் போட்டிருக்கிறேன். இப்போது, என் முதலாளி என்னுடன் வீட்டிற்கு வந்தால், என் முதலாளி என்னுடன் வீட்டில் இருக்கிறார் என்று என் அயலகத்தார் அனைவரும் அறிய வேண்டும் என்று நான் விரும்புவேன். ஆனால், இயேசுவே, வரும்படி நான் உம்மை அழைக்கிறேன். யாராவது உள்ளே வந்தால், அவர்கள் போகும் வரை நான் உம்மை ஒரு மூலையில் தள்ளி வைக்கிறேன். நான் - நான் ஜெபத்தைத் தொடர மாட்டேன். என்னுடன் ஜெபத்தில் தலைவணங்குவார்களா என்று நான் அவர்களிடம் கேட்க மாட்டேன், ஏனென்றால் அவர்கள் மேலே வந்தபோது நான் ஜெபத்தில் இருந்தேன். நான் சபையில் உம்மைப் பற்றி வெட்கப்பட்டிருக்கிறேன். அழைக்கப்பட்டபோது சாட்சி சொல்ல நான் வெட்கப்பட்டிருக்கிறேன். ஜெபத்தில் வழிநடத்த நான் வெட்கப்பட்டிருக்கிறேன். அந்தக் குழுவிடம், நான் சுற்றித்திரியும் பையன்கள் அல்லது பெண்களிடம் பேச நான் வெட்கப்பட்டிருக்கிறேன். இன்றிரவு முதல், இயேசுவே, நான் உம்மைப் பற்றிப் பேசப் போகிறேன். நான் எல்லா இடங்களிலும் உம்மைப் பற்றிச் சாட்சி சொல்லப் போகிறேன்." தங்கள் கையை உயர்த்தாத யாராவது உங்கள் கையை உயர்த்துவீர்களா? வேறு யாராவது இப்போது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா, நான் உங்களை அங்கே பின்னால் பார்க்கிறேன், ஒரு உண்மையான முதியவர், நடுக்கத்துடன் கைகளை உயர்த்தியிருக்கிறார். தேவன் அவர் மேல் இரக்கமாயிருப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, இளம் பெண்ணே. அது மிகவும் நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, சகோதரி, இங்கே கீழே. அது மிகவும் நல்லது. 67 நீங்கள் இதைச் செய்வதைப் பார்க்க நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் நிறமுள்ள சகோதரி (colored sister). தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே, அங்கே பின்னால். அது மிகவும் நல்லது. பால்கனியில் வேறு யாராவது, இப்போது அந்த வழியைப் பார்க்கும்போது? நான் சொல்கிறேன்... உங்கள் கையை உயர்த்தி, "இயேசுவே, என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராகச் சிறு பையனே. அது நல்லது. நீ அதைச் செய்வதைப் பார்க்க நான் மகிழ்ச்சியடைகிறேன், கண்ணே. ஒரு சிறுவன்தான், ஆனால் அது நல்லது. நீ கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறாயா? நீ இப்போது இளமையாக இருக்கிறாய், இன்றிரவு அவர் கட்டிடத்தில் இங்கே இருக்கிறார். அவர் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன் இருதயத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். உன் கையை உயர்த்தும்படி அவர் உன்னிடம் சொல்கிறார். அதன் ஆரம்பத்திலேயே இங்கே அதைச் செய்ய நீ வெட்கப்படுகிறாயா? சரி? அது சரி. கர்த்தர் இப்போது உங்களை ஆசீர்வதிப்பாராக, நாம் தலைகளைத் தாழ்த்தும் வேளையில். 68 பரலோக பிதாவே, தங்கள் கைகளை உயர்த்தியவர்களை நீர் பார்க்கிறீர். அவர்களைப் பற்றி எல்லாம் உமக்குத் தெரியும். இப்போது, நான் ஜெபிக்கிறேன், தேவனே, இது அசைவாடுகிற மற்றும் உடைக்கிற நேரமாக இருக்கட்டும், குடும்பங்கள் மீண்டும் ஒன்றி ணைக்கப்படும் வரை, தேவ வல்லமை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வரும் வரை இந்த வாரம் அத்தகைய ஒரு எழுப்புதல் வீசட்டும்: பழைய பாணி ஜெப பீடங்கள், அங்கே அப்பாவும் அம்மாவும் பிள்ளைகளும் மேஜையைச் சுற்றிக் கொண்டு ஜெபிக்கிறார்கள், மற்றும் படுக்கையறையில், மற்றும் வரவேற்பறையில், ஜெபித்து, இயேசுவைத் தொழுது கொண்டு அவரை வரவேற்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தாக்கி, "சபைக்கு வருவது குறித்து ஜானிடம் போய்ப் பேசு" என்று சொல்லும்போது, அவர்கள் நேராகச் சென்று அதைச் செய்யட்டும். ஏனென்றால் அது நீர்தான், ஆண்டவரே. ஜானிடமோ, அல்லது பெண்ணிடமோ, அல்லது யாராக இருந்தாலும் உம்மைப் பற்றிப் போய்ப் பேச அவர்கள் வெட்கப்படாமல் இருக்கட்டும். அருளும், பிதாவே. அது ஒரு பெரிய நேரமாக இருக்கட்டும். கைகளை உயர்த்திய இவர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். அவர்களை இரட்சியும்; அவர்கள் பாவங்களை மன்னியும், அவர்களை உம்முடைய பிள்ளைகளாக மாற்றும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். ~ 87 ~